பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவித்ரோற்சவ விழா
விழுப்புரம் அருகே பூவரசங்குப்பம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பவித்ரோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் பவித்ரோற்சவ விழா நடைபெற்றது.
இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, பவித்ர மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples
0 Comments