உங்கள் வீட்டில் கெட்ட சக்தி குடி கொண்டுள்ளதா! என்பதை எப்படி கண்டுபிடிப்பது? கெட்ட சக்தியால் பாதிப்படைந்தவர்கள், குலதெய்வ பரிகாரம் செய்வது எப்படி?

 உங்கள் வீட்டில் கெட்ட சக்தி குடி கொண்டுள்ளதா! என்பதை எப்படி கண்டுபிடிப்பது? கெட்ட சக்தியால் பாதிப்படைந்தவர்கள், குலதெய்வ பரிகாரம் செய்வது எப்படி?


நல்ல சக்தியின் ஆதிக்கம் இந்த பூலோகத்தில் இருக்கின்றது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவிற்கு, கெட்ட சக்தியும் இருக்கின்றது என்றே சொல்லலாம். காரணம், நல்லது மட்டும் இருந்தா எல்லோருக்கும் நல்லது மட்டும் தானே நடக்கணும்! ஏன் கெட்டது நடக்குது? எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும் பட்சத்தில் தான், கெடுதல் நடக்கின்றது அல்லவா? சரி. கெட்ட சக்தியானது உங்கள் வீட்டிலோ அல்லது உங்களிடமோ குடிகொண்டு இருக்கின்றது, என்பதை எப்படி கண்டறிய முடியும், என்பதைப் பற்றியும், இதுபோன்ற பிரச்சனைகள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்களிடத்திலோ இருந்தால், அதைப் போக்கிக் கொள்ள என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதையும் பற்றியும்தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


இதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, கெட்ட சக்திகளான ஏவல், பில்லி, சூனியம் இவைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதுவுமே இல்லை. பரிகாரமும் இல்லை. உங்கள் குலதெய்வமானது குடிகொண்டிருக்கும் இடம் என்றால், அது உங்களுடைய நில வாசப்படி என்று சொல்லலாம். ஒருவருடைய கால்கள் தொடர்ந்து நிலையிலோ அல்லது அங்கு இருக்கும் படிக்கட்டிலோ, இடி பட்டு கொண்டே இருந்தாலும், ஒருடைய தலை வாசல் படியில், இடித்துக் கொண்டே இருந்தாலும், அவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பதை குலதெய்வம் அவருக்கு வலியுறுத்துவதாக அர்த்தம். அடிக்கடி  குறிப்பாக கால் கட்டை விரலில், நில வாசப்படியில் இடித்துக் கொள்வார்கள். கொஞ்ச நாள் கழிச்சு பார்த்தா, அவங்களுக்கே தெரியாம ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கி இருப்பாங்க!


அடுத்ததாக, ஒரு மனிதனின் நிம்மதியான தூக்கம் கெடும். தொடர்ந்து உடல் சோர்வினால் தோல்வியை மட்டுமே சந்தித்து வருவார்கள். அவங்க வீட்டிலேயும் சரி, அவங்க மேலேயும் சரி, ஒரு வித்தியாசமான, கெட்ட வாடை வீச ஆரம்பிக்கும். வீட்ல இருக்கிற உடையக்கூடிய பொருட்கள், அடிக்கடி கீழே விழுந்து உடைந்து கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக, கண்ணாடி பொருட்கள் கணவன் மனைவிக்குள் உங்கள், வாழ் நாளில் இல்லாத ஒரு சண்டை உருவாகி, அன்னியூன்னியத்தை கெடுத்துவிடும். சிலபேர் வீட்ல ஒரு பல்லி கூட இருக்காது. இதுவும் அபசகுண குறியீடு தான். மனம் பலவீனம் அடைந்து, எந்த ஒரு செயல்பாட்டிலும், சுறுசுறுப்பாக ஈடுபடாமல், நிம்மதியாக தூங்கவும் முடியாமல், ஒரு சோம்பேறித்தனம் நம் உடம்புக்குள் புகுந்து ஆட்டிப்படைக்கும். உடல் எரிச்சல் ஏற்படும்.


இது எல்லாவற்றையும்விட, உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வைத்தீர்கள் என்றால், காற்று வீசவில்லை என்றாலும், அந்த சுடரானது நின்று எரியாது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு ஒரு முறை இரண்டு முறை ஏற்பட்டால், பயம் தேவையில்லை. தொடர்ந்து ஏற்பட்டு வரும் பட்சத்தில் உங்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்பதை கணித்து விடலாம்.


இப்படிப்பட்ட பிரச்சினைகளை, உங்களுக்கு உருவாக்க வேண்டும் என்று நினைக்கும், உங்கள் எதிரிகள் முதலில் உங்களது குலதெய்வத்தை தான் கட்ட பார்ப்பார்கள். ஆக, உங்களது குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று வர பாருங்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று, எலுமிச்சை பழம் வாங்கி வைத்து, அதாவது குலதெய்வம் மடியில் வைத்து, பூஜை செய்துவிட்டு, அந்த எலுமிச்சை பழத்தை வீட்டிற்கு எடுத்து வரவேண்டும். இரண்டு எலுமிச்சை பழங்கள் அவசியம் தேவை. ஒரு எலுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். ஒரு எலுமிச்சை பழத்தை ஜூஸ் எடுத்து குடித்து விடலாம்.


இப்படி குலதெய்வத்தின் எழுமிச்சைபழம் உங்கள் வீட்டில் வாடிய பின்பு, திரும்ப திரும்ப இதே முறையை பின்பற்றி வரவேண்டும். குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வருவதற்கு இது ஒரு சிறந்த வழியாக அமையும். முடிந்தவர்கள், ஏதாவது ஒரு ஜீவ சமாதிக்கு சென்று அங்கேயே தங்கி, உங்களது நேரத்தை செலவழிக்கலாம். உங்களால் முடிந்தால் இரண்டு, மூன்று நாட்கள் கூட ஜீவசமாதியில் தங்கி, உங்களால் முடிந்த சேவைகளை செய்யலாம். நல்ல பலன் இருக்கும். உங்கள் உடம்பில் இருக்கும் எந்த ஒரு தீய சக்தியாக இருந்தாலும் வெளியில் ஓடி விடும்.


குறிப்பாக நாகப்பட்டினத்தில் இருக்கும் கோரக்கர் சமாதிக்கு பவுர்ணமி தினத்தில் சென்று வழிபட்டால் இப்படிப்பட்ட பில்லி, சூனியம் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று, கடலில் தலை மூழ்கி விட்டு இரவு தங்கலாம். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். வேப்பிலை, மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் தலைக்கு குளித்துவிட்டு, பின்பு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு செல்லலாம். குறிப்பாக அஷ்ட காலபைரவர் கோவிலுக்கு செல்லலாம். இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது எது தெரியுமா? யாரை கெட்ட சக்தியானது சீக்கிரம் அணுகும்? யாரிடம் மன உறுதி இல்லையோ, மன தைரியம் இல்லையோ, அவர்களை கெட்ட சக்தி கட்டாயம் சீக்கிரம் பிடித்துக்கொள்ளும். மன தைரியத்தோடு, இவையெல்லாம் எதுவுமே இந்த பூமியில் இல்லை என்ற உறுதியோடு தைரியத்தோடு, மன உறுதியோடு இருப்பவர்களுக்கு எந்த கெட்ட சக்தியும் கிடையாது. எந்த கெட்ட சக்தியும் அவர்களை எதுவும் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்கு பிரச்சினை என்று வரும் சமயத்தில், யாரை நம்மையும் அதிகப்படியான பணத்தை கொடுத்து ஏமாறாமல், முழுமையான இறை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியும் விலகிவிடும். உங்களிடம் இருக்கும் கெட்ட சக்தியும் கட்டாயம் விலகி விடும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments