இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறும் அதிசய சிலை. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்

 இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறும் அதிசய சிலை. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்



ஆதி தமிழனின் அறிவியலை கண்டு உலகில் உள்ள பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஆய்விற்காக நம் நாட்டை தேடிவருகின்றனர். அதிலும் ஆன்மீக ரீதியாக அவர்கள் நிகழ்த்தியிருக்கும் பல அறிவியல் சாதனைகளுக்கு இன்றும் விடைதெரியாமல் பலர் திணறிக்கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட அதிசயங்களைக் கொண்ட மூன்று சிலைகளை பற்றித்தான் இந்த பதிவில் காணப்போகிறோம். நிறம் மாறும் அம்மன் சிலை சிவகங்கை மாவட்டம், திருப் புவனம் அருகேயுள்ள கல்லுமடையில் பழமையான நாகேசுவரமுடையார் கோயில் உள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் உள்ள மீனாட்சி அம்மன் சிலை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் மாறுகிறது. அதோடு பௌர்ணமி மற்றும் அம்மாவாசை நாட்களில் அம்மன் கண்களில் இருந்து ஒரு விதமான ஒளி தோன்றுகிறது.


நிறம்மாறும் நந்தீஸ்வரர் 

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஒரு கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பெயர் ‘ஸ்ரீ அனுபாம்பிகை சமீத ரிஷபேஸ்வரர் கோயில்’. வருடத்திற்கு ஒரு முறை பங்குனி மாதம் மூன்றாம் தேதி அன்று இந்த நந்தீஸ்வரர் தங்க நிறத்தில் காட்சி அளிக்கின்றார். இந்த அதிசய நிகழ்வான முதன்முதலாக 2012ஆம் ஆண்டு பங்குனி மூன்றாம் தேதி நடந்த பிரதோஷ வழிபாட்டில் தான் நடந்தது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பங்குனி மூன்றாம் தேதி அன்று சூரிய ஒளியானது ராஜகோபுரத்தில் உள்ள கலசத்தில் விழுந்து அதன் பிரதிபலிப்பு நந்தியின் மேல் பட்டு நந்தியின் சிலை தங்க நிறத்தில் காட்சியளிக்கின்றது.


இக்கோவிலுக்கு சிறப்பினை தந்து, மக்களை வியப்படையச் செய்யும் இந்த கோவிலின் வெளிப் பிரகாரத்தில், தென்கிழக்கு மூலையில் அரசமரத்தடியில் அமைந்திருக்கும் அதிசய விநாயகர், 6 மாதம் வெள்ளையாகவும், ஆறுமாதம் கறுப்பாகவும் காட்சியளிக்கின்றார்.  அதாவது ஆவணி முதல் தை மாதம் வரை கருப்பு நிறமாகவும், மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை வெள்ளை நிறமாகவும் காட்சி அளிக்கின்றது. அந்த விநாயகர் சிலை நிறம் மாறுவதை பொருத்து அங்கு உள்ள அரசமரமும், கிணற்று நீரும் நிறம் மாறுவதாக நம்பப்படுகிறது. இந்த அதிசய விநாயகரின் சிலையை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சி வல்லுநர்கள் இந்த சிலையானது சந்த காந்தம் என்ற அபூர்வ வகையான கல்லினால் செதுக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். இப்படி பல அற்புதங்கள் நிறைந்த இந்த சிலைகளை அந்த காலத்தில் எப்படி செய்தார்கள் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. ஆன்மிகத்தில் அறிவியலை புகுத்தி உலகையே உற்றுநோக்க  செய்த நம் முன்னோர்களின் அறிவை என்ன வென்று வியப்பது.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments