தேவராஜசுவாமி கோயில்
பிரம்மா உலகத்தை படைத்து முடித்த பின்னர் ஸ்ரீபெருமாளை ஸாக்ஷாத்கரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நெடுங்காலம் தவம் இருந்தும் சித்தசுத்தி ஏற்படவில்லை. அதை கண்டு கலங்கி நின்ற போது ஒரு அசீரிரி வாக்கு உண்டாயிற்று.
“ நீர் ஆயிரம் அஸ்வமேதயாகங்கள் செய்தாலன்றி சித்த்சுத்தியை பெறமாட்டீர். அவைகளை செய்ய வெகு காலமாகும். ஒரு உபாயம் சொல்கிறேன் பாரத வர்ஷத்திலே “ஸத்யவ்ரதம்” என்று ஒரு க்ஷேத்திரம் இருக்கிறது. அந்த க்ஷேத்திரத்தில் ஒரு சத்கர்மம் ஆயிரமாக பலன் தரும். அங்கே சென்று எம்பெருமானைக் குறித்து ஒரு அஸ்வமேத யாகம் செய்தால் உமது அபீஷ்டம் நிறைவேறும்.
உடனே பிரம்மா அமரசில்பியான விஸ்வகர்மாவை அழைத்து சத்யவ்ரத க்ஷேத்திரத்தில் ஹஸ்திகிரியை உத்திரவேதிகையாக வைத்து தாம் யாகம் நடத்தப்போவதாக சொல்லி அதன் பொருட்டு அங்கே ஒரு நகரத்தை நிர்மானம் செய்யும்படி ஆஞ்ஞாபித்தார். விஸ்வகர்மாவும் விண்ணவரும் வியக்கும்படியான அழகு வாய்ந்த ஒரு நகரத்தை சிருஷ்ட்டித்துவிட்டான். அங்கே சதுர்முகன் யாகம் செய்ய தொடங்கினார். தமது பத்தினியாகிய சரஸ்வதி தேவி தம்மை விட்டகன்று சில்காலமாக தனியே இருந்துவந்தபடியால் அவளை அழைத்து வரும்படி தம் மகனான வசிஷ்டரை அனுப்பினார்.அவள் கோபமாறாதபடியால் வர மறுத்துவிட்டால்.ஆகவே அவளில்லாமலே யாகம் நடத்தத் தீர்மானித்து காரியங்கள் நடந்தேறி வந்தன
இதைச்செவியுற்ற நாமகளும் மிகுந்த கோபம் கொண்டு ஒரு நதியாக பிரவகித்து யாகசாலையை எல்லாம் பாழ்பட செய்ய வெண்ணி வந்தாள்.அதைக்கண்டு பிரம்மா என்ன செய்வதன்று அறியாமல் கதி வேறில்லாதவர்கெல்லாம் கதியாய் நிற்கும் நாராயணனை சரணம் புகுந்த இப்பேராப்பதிலிருந்து தம்மை காபாற்றி தாம் அனுஷ்டிக்க வேண்டிய வேள்வியயை நிர்விக்னமாய் நிறைவேற்றி வைக்க வேண்டுமென வேண்டி நின்றார்.அப் பக்தவத்ஸலனும் ஆதிஷேஷன் மேல் சயனித்துக்கொண்டு நடி ஓடி வரும் வழியில் குறுக்கே ஒரு அணையாகக்கிடந்தார்.அவரை தாண்டி அப்புறம் செல்ல சக்தியற்றவளாய் சரஸ்வதியும் பூமியில் நுழைந்து மறைந்து விட்டாள்.அதிவேகமாக வந்தபடியால் அந்த நதிக்கு வேகவதி என்று பெயர். வேகத்தை அணையிட்டு தடுத்து அணையான அரவணையானுக்கு “வேகாசேது” என்ற பெயர் ஏற்பட்டது.அந்த நாகணைமிசை நம்பரன் தான் இப்போது “திருவெஃகா” என்னும் திவ்யக்ஷேத்திரத்தை அலங்கரிக்கும் யதோக்தகாரியாக விளங்குகிறார்.அதன்பின் சரஸ்வதி இணங்கி வர பிரம்மா அஸ்வமேத யாகத்தை நிர்விக்னமாக நடத்தினார்.
அந்த யாகம் எம்பெருமானையே உத்தேசித்து செய்யப்பட்டதாகையால் அங்கே பிரம்மா ஹவிர்பாகங்களை எந்தெந்த தேவதையின் பெயரைச் சொல்லி கொடுத்தாரோ அவை அந்தெந்த தேவதைகளுக்கு போய் சேராமல் எல்லா சப்தங்களுக்கும் பொருளாய் எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியான திருமாலுக்கே நேராகச் சேர்ந்து விட்டன. கடைசியில் வபாஹோமம் செய்யப்பட்டது. உடனே அந்த அக்னியின் நடுவிலிருந்து அநேககோடி சூர்யர்களுக்கு சமமான காந்தியுடன் ஒரு விமானம் தோன்றிற்று.அந்த விமானத்தின் நடுவில் ரமணீயமான தோற்றத்துடன் பஞ்சாயுததாரியாயும், திருமகள், மண்மகள் முதலிய தேவிமாரால் சூழபட்ட வராயும் பகலோனைச் பகல் விளக்காகச் செய்யும் ஒளிபொருந்தியவராயுமுள்ள வரதன் தோன்றினார். அவரை பலவிதங்களாக பூசித்து வணங்கி வழிபட்டு பிரம்மா தோத்திரம் செய்தார்.
அந்த ஸ்தோத்திரங்களால் ப்ரீதியடைந்த பெருமாளும் உமக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க இத்தனை ஜீவராசிகளும் இன்றைக்கு தேவரீரது திவ்யரூபலாவண்யங்களை கண்டு ஆனந்திப்பது போல என்றென்றைக்கும் எல்லா ஜீவராசிகளும் தேவரீரை கண்டு ஆனந்தித்து நற்கதி அடையுமாறு அனுக்கிரகம் செய்ட்குக்கொண்டு இந்த அத்திகிரியிலே ஸ்திரவாசம் செய்தருள வேண்டும் என்று பிரம்மா வேண்ட கேட்ட வரங்களை கொடுக்கும் “வரதன்” என்று விசேஷமான பெயருடைய பிரபுவும் அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்தார். அது முதல் அத்திகிரியில் எல்லாரும் நேராகக் கண்டு அனுபவிக்குபடியான நிலையில் சாந்நித்யம் செய்தருளுகிறார் தேவாதிராஜன். அவரைக் கிருதயுகத்தில் பிரம்மா சாக்ஷாத்கரித்து பூஜை செய்தார். திரேதா யுகத்தில் முதலையால் துன்புற்ற கஜேந்திரன் அவரை பூஜித்து ரக்ஷனம் பெற்றார், துவாபரயுகத்தில் தேவகுருவான ப்ரஹஸ்பதியால் அர்ச்சிக்கப்பட்டார், கலியுகத்தில் ஆதிசேஷனால் அர்ச்சிக்கப்படுகிறார்.
கட்டமைப்பு பெயர் - சதுர வடிவமைப்பை கொண்டது
கட்டமைப்பு விவரம் - இத்திருக்கோயில் நான்கு பிராகாரங்களை கொண்டது.
மேற்கு வாயிலாக நுழைந்தவுடன் கொடிமரம் பின் தொண்டரடிப்பொடி வாசல்.
வடமேற்கு மூலையில் திருக்குளம்
உள்ளே சென்றவுடன் அபிஷேக மண்டபம் & தாயார் சன்னதி.
ஸ்ரீ கருடன் சன்னிதி வாயில் வழியாக சென்றால் அழகியசிங்கர் சன்னதி.
அழகிய சிங்கர் சன்னதி பிராகாரமாக சென்று அத்திகிரி மலைமீது 24 படிகள்
வழியாக சென்றால் தேவராஜ பெருமாள் சன்னதி.
கோபுரத்தின் பெயர் - மேற்கு ராஜகோபுரம்
கட்டியவர் பெயர் - விஜயநகர பேரரசு
கலசங்கள் எண்ணிக்கை - 7
இடிதாங்கி உள்ளதா - ஆம் / உள்ளது
கோபுரம் விவரம் - மூலவர் ஸ்ரீ தேவராஜர் மேற்கு நோக்கி இருப்பதால் கோயிலின் பிரதான நுழைவாயில் மேற்குப் பகுதி. இந்த மேற்கு ராஜகோபுரம் 7 அடுக்குகளைக் கொண்டது, அகலம் 92.5 அடி கல்காரம் கிரானைட் கல் மற்றும் சுண்ணாம்பால் ஆனது 96.00 அடி உயரத்தை விஜயநகர பேரரசால் கட்டப்பட்டது
கோபுரத்தின் பெயர் - கிழக்கு ராஜகோபுரம்
கட்டியவர் பெயர் - விஜயநகர பேரரசு
கலசங்கள் எண்ணிக்கை - 9
இடிதாங்கி உள்ளதா - ஆம் / உள்ளது
கோபுரம் விவரம் - இத்திருக்கோயில் விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட 11 அடுக்கு மற்றும் 9 கலசங்களைக் கொண்டது, 125 அடி உயரம் மற்றும் 99 அடி அகலம் கொண்ட கருங்கல்லால் ஆன கலக்கரத்தில் சுண்ணாம்பு மற்றும் செங்கல் கலவையின் மூலம் கட்டப்பட்டுள்ளது
உபசன்னதி பெயர் - ஸ்ரீ தேவராஜ சுவாமி
விமானம் வகை - ஆனந்த விமானம்
கருவறை வடிவம் - சதுர வடிவம்
சிறப்பு - வரலாற்று சிறப்பு
உபசன்னதி விவரம் - திருக்கோயிலின் பிரதான மூலவர் ஸ்ரீ தேவராஜ சுவாமி
திருத்தல சிறப்பு - வரலாற்று சிறப்பு
சிறப்பு விளக்கம் - அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலானது சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்டதாகும்.
இத்திருக்கோயிலுக்கு கிருஷ்ணதேவராயர், பராந்தக சோழன், பல்லவ மன்னர்கள், ஹொய்சால மன்னர்கள் ஆகியோர் இத்திருக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples
0 Comments