திருவெள்ளரை புண்டரீகாக்ஷன் பெருமாள் கோயில்
Thiruvellarai Pundarikakshan Perumal Temple in Tamil
சோழ நாட்டிற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. இறைவன் தானே விரும்பி அமர்ந்து பூலோகத்தில் அருள்பாலிக்கும் அதிசயங்கள் உண்டு. எத்தனையோ அவதாரங்களையும் எடுத்து நம்மை ஆளவந்த எம்பெருமான் திருவெள்ளறை என்னும் திருப்பெயரில் கோயில் கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
திருவெள்ளறை இது திருச்சி- துறையூர் மார்க்கத்தில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் வடபகுதியில், பத்து ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் முப்பத்தாறு அடி உயரமுள்ள பிரம்மாண்டமான மதில் சுவற்றினால்,முன்று பிரகாரங்களை உள்ளடக்கி கொண்டு, நின்ற திருக்கோலத்தில் கிழக்கு முகமாக அருள்புரிகிறார் புண்டரீகாக்ஷன் என்னும் திருநாமத்துடன்.
தாயார் செண்பகவல்லி பங்கயச் செல்வி. இந்த கோயிலின் மதிலுக்குள் ஏழு வகையான தீர்த்தங்கள் உண்டு. திவ்ய, கந்த க்ஷிர புஷ்கரணிகள், குச, சக்ர, புஷ்கல, பத்ம, வராஹமணிகர்ணிகா என்பது அவற்றின் பெயர்.பெருமாள் இங்கு வந்து அறுபத்தி நான்கு சதுர்யுகமாகி விட்டது என்றும், சிபி சக்கரவர்த்தி பூமி தேவிக்கும் மார்க்கண்டேய முனிவருக்கும் பகவான் நேரிடையாக தோன்றி காட்சி கொடுத்ததாகவும் வரலாறு. கங்கை, யமுனை, கோதாவரி போன்ற புண்ணிய நதிக்கரையோரம் வாழ்க சுமார் நான்காயிரம் அந்தணர்களை சிபி சக்கரவர்த்தி இங்கு அழைத்து வந்து பெருமாளுக்கு சேவை புரிய வைத்ததாக ஒரு செய்தியும் உண்டு.
தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண வாசல் வழியாகவும் ஆடி முதல் மார்கழி மாதம் வரை தக்ஷிணாயண வாசல் வழியாகவும் சென்று பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு. பெருமாளை நேரடியாக தரிசனம் பெற இதுதான் சரியான பாதை என்று முனிவர்கள் சொன்னதாக ஒரு தகவல். நாழிகேட்டான் வாசல் என்று ஒன்று உண்டு. இந்த வாசலில் நின்று தான்- இரவில் வெகு நேரம் கழித்து கோவிலுக்கு திரும்பிய புண்டரி காஷப் பெருமாளை வழிமறித்து ஏன் இவ்வளவு நேரம்? என்று கேட்டாளாம் செண்பகவல்லி. அதற்காக இப்பெயர் நிலவுகிறது.
ஒரு காலத்தில் மிகவும் மென்மையான பறவைகளை கொண்டு மலைபோல் விளங்கிய இந்த இடம் இப்பொழுது அப்படி எதுவும் காணப்படவில்லை. உய்யக்கொண்டார் அவதாரத் ஸ்தலம் உடையவர் வைணவத்தை வளர்க்க எங்கிருந்துதான் அரும்பாடுபட்டார். பெரியாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோர் மங்களாசாஸனம் செய்த தலம். எங்களாழ்வான் என்பவரால் நடா தூரம்மாள் என்பவனுக்கு ஸ்ரீ பாஸ்ய சிம்மாசனதி என்ற விருது பெற்ற தலம். சோழநாட்டு திருப்பதியாகக் கருதப்படுகிறது.
பரிகாரம்
இந்த தலத்தில் வந்து தங்கி புண்டரீகாக்ஷனை தினமும் தரிசித்து பிரார்த்தனை செய்தால், தோல் வியாதிகள் குணமாகும். விஷயங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இராகு கேதுவினால் கடுமையாக அவதிப்படுபவர்கள், எதிரிகளின் தொல்லையால் மனநிம்மதி இழந்து துடிப்பவர்கள், தொழில் போட்டியினால் வியாபாரத்தில் லாபத்தை தொலைத்தவர்கள், டாக்டர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் அனைவரும் புதுவாழ்வு பெறுவதுடன் கடந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை விலக்கி கொள்ள வாய்ப்புண்டு. இங்கு வந்து தரிசனம் செய்தால் எல்லோருக்குமே மோட்சம் கிடைக்கும் என நம்பலாம்
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments