ஜெயின் கோயில் பாலக்காடு
பாலக்காடு நகருக்கு வெகு அருகில் உள்ள ஜெயின்மேடு என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஜெயின் கோயில், பாலக்காடு மாவட்டத்தின் கலாச்சார பன்முகத் தன்மையை பளிச்சென எடுத்துக் காட்டும் வரலாற்று நினைவுச் சின்னமாகும். இந்தியாவின் வெகு சில ஜைன கோயில்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இந்தக் கோயில் சந்திரநாத கோயில் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஜைன மதத்தின் உன்னத அடையாளமாக காட்சியளித்து வரும் ஜெயின் கோயில் கருங்கற்களை கொண்டு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தக் கோயில் 32 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஜைன தீர்த்தங்கரர்கள் மற்றும் யக்ஷிணிகளின் உருவங்களோடு, சந்திரநாதன், விஜயலக்ஷ்மி நாதன், ரிஷபா, பத்மாவதி உள்ளிட்ட தெய்வச் சிலைகளையும் நீங்கள் பார்க்கலாம். ஜெயின்மேடு பகுதியில் இருந்துகொண்டுதான் புகழ்பெற்ற கேரள கவி குமரன் ஆசான் தன்னுடைய வீணா பூவு எனும் அழியாப் படைப்பை இயற்றியதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயின் கோயில் முன்பு 400 ஜைன குடும்பங்களுக்கு வழிபாட்டு இடமாக இருந்து வந்தது. இதன் காரணமாக இப்போது இந்தக் கோயிலுக்கு ஏராளமான் வரலாற்று ஆர்வலர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples
0 Comments