உங்களின் எத்தகைய கோரிக்கைகளும் நிறைவேற இக்கோயிலில் வழிபடுங்கள்

 உங்களின் எத்தகைய கோரிக்கைகளும் நிறைவேற இக்கோயிலில் வழிபடுங்கள்


உலகை ஆளும் லோகநாதனாகிய சிவபெருமானுக்கு பாரதத்திலும், உலகெங்கிலும் பல கோயில்கள் இருக்கின்றன. அவரின் சரிபாதியான பார்வதி தேவியான சக்தி தேவிக்கும் பல கோயில்கள் இந்நாட்டில் உள்ளன. சக்திகுரிய இக்கோயில்கள் அனைத்தும் சக்தி பீடங்கள் என அழைக்கப்டுகின்றன. அப்படி பக்தர்கள் அனைவரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் “பாலகொல்லு ஸ்ரீ க்ஷீரராம லிங்கேஸ்வரர் கோயில்” பற்றிய சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் கோயில் வரலாறு

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த க்ஷீரராம கோயில். இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் க்ஷீரராமர் என்றும், அம்பாள் மாணிக்காம்பாள் என்கிற பெயரிலும் வணங்கப்படுகிறார்கள். இக்கோயிலில் உள்ள லிங்கம் ராமபிரானால் வழிபடப்பட்டதாகும். 10 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ வேலுபதி என்கிற மன்னரால் கட்டப்பட்ட கோயிலாக இது இருக்கிறது. இக்கோயில் அம்மனின் 51 சக்தி பீட கோயில்களில் மாணிக்க பீட கோயில் ஆகும்.

தாரகாசுரனை வதம் புரிந்த குமாரசாமி என்கிற முருகப்பெருமான் அவன் கழுத்தில் கட்டியிருந்த லிங்கத்தை உடைத்த போது அதில் ஒரு பகுதி இங்கு விழுந்து அதுவே இக்கோயிலின் மூலவர் லிங்கமாக இருக்கிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான கௌஷிக ரிஷியின் மகனான உபமன்யு இங்கு சிவபெருமானை நோக்கி தவமியற்றிய போது, சிவாபிஷேகத்திற்கு பால் கிடைக்காமல் தவித்த போது சிவபெருமானிடம் வேண்ட, சிவன் தனது சூலாயுதத்தை பயன்படுத்தி திருமாலின் பாற்கடலில் இருந்து இங்கு பால் ஊற்று ஏற்படுத்தினார். ஏரளமான பால் பெருக்கெடுத்து ஓடியதால் இவ்வூருக்கு பாலகோடா என்கிற பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் இது பாலுகொல்லு என்று அழைக்கப்படலாயிற்று.

அருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் கோயில் சிறப்புக்கள்

இக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் 27 கற்களாலான தூண்கள் இருக்கின்றன. கர்பக்கிரகத்தின் நான்கு பக்கமும் உள்ள ஜன்னல் மூலம் மூலவர் லிங்கத்தை தரிசிக்கலாம். மேலும் ராமர், விக்னேஸ்வரர், பிரம்மா, பைரவர், முருகன், நடராஜர், கனக துர்க்கா, மகிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு தனி தனி சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோயிலின் லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. தங்களின் எத்தகைய கோரிக்கைகளும் இங்கு வந்து வேண்டினால் சிவன் மற்றும் பார்வதி தேவியின் அருளால் அவை நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

 கோயில் அமைவிடம் 

அருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் கோயில் ஆந்திர பிரதேசம் மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலக்கொல்லு என்கிற ஊரில் அமைந்துள்ளது. 

கோயில் நடை திறப்பு 

காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். 

கோயில் முகவரி 

அருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் கோயில் பாலக்கொல்லு மேற்கு கோதாவரி மாவட்டம் – 534260 ஆந்திர பிரதேசம்

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments