பிரபலங்கள் கொண்டாடும் கோவில்! இந்த கோவிலுக்கு போனவங்கள்லாம் இன்னிக்கு ஓஹோனு வாழ்றாங்க!

பிரபலங்கள் கொண்டாடும் கோவில்! இந்த கோவிலுக்கு போனவங்கள்லாம் இன்னிக்கு ஓஹோனு வாழ்றாங்க!



கணபதி ஹோமமும், பால் அபிஷேகமும் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு வந்து செய்தால் உங்கள் தொழில் விருத்தியடைந்து, உங்கள் தொழிலில் நீங்கள் ராஜாவாக மாறிவிடுவீர்கள் என்றால், அது எந்த கோவில் என்று கேட்பீர்கள் தானே.. இருங்கள்.. இந்த கோவிலுக்கு சென்றால், உங்கள் தொழில் மட்டுமல்ல, குடும்பமும் சேர்ந்தே வளமான பாதைக்கு திரும்பும், சச்சரவுகள் தீர்ந்து, கல்வியும் செல்வமும் நிலைப் பெறும். திருமணம், குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் சில வருடங்களிலேயே முற்றிலும் தீர்ந்து வாழ்வில் வசந்தம் வீசும் என்று இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடித்து கூறுகிறார்கள். ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதீங்க.. சொல்லுங்க அது எந்த கோவில்னுதான கேட்குறீங்க. வாங்க முகவரியில இருந்து எப்படி போறது உள்ளிட்ட பல தகவல்களுடன் கோவிலின் மற்ற அருமை பெருமைகளையும் சொல்றோம் கேட்டுக்கோங்க.
எங்கு அமைந்துள்ளது

அருள்மிகு கற்பக விநாயகர் கோவில் சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது. பிள்ளையார் பட்டி கிராமம் திருப்பத்தூரில் இருந்து குன்றக்குடி செல்லும் வழியில் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அருள் மிகு கற்பக விநாயகர் கோவிலுக்கு செல்ல வாடகை வாகனங்கள், பேருந்து வசதிகள் உள்ளன.
நன்மைகள்
மனம்போல் வேண்டுபவனவற்றை தருவதால் இவருக்கு கற்பகவிநாயகர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அறிவு ஒளி தரும் விநாயகராக இவர் இருக்கிறார். இவரை மனதார தொழுதால் கல்வியும், ஞானமும் ஒரு வருக்கு கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். திருமணத் தடையும், மற்ற தோஷங்களும் விநாயகரை வேண்டினால் தாமாக விலகும் என்பது இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் வெகு உறுதியான நம்பிக்கை.
கோவில் அமைப்பு
குன்றைக் குடைந்து சிறிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் விநாயகர் வலது கையில் லிங்கம் ஏந்தியவாறு காட்சி அளிக்கிறார். வலம்புரியாக சுழித்த தும்பிக்கையுடன் இவர் வலம்புரி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். கோவிலின் உட்பகுதிகள் பாண்டிய மன்னர்களால் குடைவரைக் கோவிலாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நிர்மாணித்துள்ளனர்.
கோவிலுக்குள் செல்லும் முறை
விநாயகர் சந்நிதிக்கு எதிர்ப்புறம் அமைந்த வடக்கு கோபுர வாயில் வழியாக சென்று வழிபட்டு முடித்துவிட்டு, கிழக்கு பக்கம் இருக்கும் ராஜகோபுர வாசல் வழியாக வெளியே வரவேண்டும்.
நடை திறப்பு கற்பக விநாயகர் கோவில் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 9 மணி வரையில் திறந்திருக்கும். தைப் பூச தினத்தில் மட்டும் காலை 6 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பூசைகள்
ஐந்து கால பூசை நடைபெறுகிறது.
அதிகாலை
காலை
மதியம்
மாலை
இரவு
திருவிழாக்கள்
விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆவணி மாதம் 10 நாட்கள் நடக்கின்றன. விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக நடைபெறும் திருவிழாவாகும். இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தங்குமிடங்கள் மற்றும் அருகிலுள்ள கோவில்கள்
அருகிலேயே தங்குவதற்கு வசதியான விடுதிகள் இருக்கின்றன. கூத்தடைப்பட்டி, செஞ்சை, செக்காலை, அறியாக்குடி பகுதிகளில் குறைந்த விலையில் சராசரி வசதிகளுடன் விடுதிகள் கிடைக்கின்றன. காரைக்குடி அம்மன் கோவில், குன்றக்குடி முருகன் கோவில், வைரவன்பட்டி கோவில், திருப்பத்தூர் கோவில், சௌம்ய நாராயண பெருமாள் கோவில் ஆகியன அருகாமையில் இருக்கும் கோவில்கள் ஆகும்.
எப்படி செல்வது
காரைக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவில் பிள்ளையார் பட்டி கோவில் அமைந்துள்ளது. திருப்பத்தூர் - குன்றக்குடி பேருந்துகளில் பயணித்தால் பிள்ளையார்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோவிலை எளிதில் அடையலாம்.


Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments