திருமாலின் சயன கோல வகைகள் மற்றும் சயன கோயில்களின் சிறப்பம்சங்கள்

 

மகாவிஷ்ணு பல ரூபங்களில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அதில் ஒன்று தான் சயன கோலம். சயன கோலத்தின்



மகாவிஷ்ணுவின் சயனதலங்கள்:

ஸ்ரீரங்கம் – வீர சயனம்
மகாபலிபுரம் – தல சயனம்
திருமயம் – போக சயனம்
திருக்கோஷ்டியூர் – பால சயனம்

கும்பகோணம் – உத்தான சயனம்
திருவனந்தபுரம் – அனந்த சயனம்

திருமோகூர் – பிரார்த்தனா சயனம்
திருப்புல்லாணி – தர்ப்ப சயனம்
திருச்சித்திரக்கூடம் – போக சயனம்
திருநீர்மலை – மாணிக்க சயனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் – வடபத்திர சயனம்


திருமாலின் 10 வகை சயனங்கள் :

1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம்
5. வீர சயனம்

6. போக சயனம்
7. தர்ப்ப சயனம் (தர்ப்ப எனில் தர்ப்பை புல்)
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
போக சயனம்
திருவள்ளூர், சீர்காழி அருகே அமைந்துள்ள திருச்சிரகூடம் அமைந்துள்ளது. இங்குள்ள தாயார் புண்டரீக வல்லி சமேத கோவிந்தராஜர் பெருமாள் கோயிலில் திருமால் போக சயனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த திருத்தலம் 40வது திவ்ய தேசமாகும்.


தர்ப்ப சயனம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி கல்யாணஜகந்நாதர் - கல்யாண வல்லி தாயார் அமைந்துள்ள கோயில் 105வது திவ்ய தேச கோயிலாகும். இங்கு ஸ்ரீ ராமர் இளைப்பாற தர்ப்பையில் சயனத்ததாகவும், இந்த தர்ப்ப சயன காட்சியாகவே எம்பெருமான் அருள்பாலிக்கிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.மயிலாடுதுறையில் வானத்தை முட்டும் அளவிற்கு உயரமான மற்றொரு அத்தி வரதர் பெருமாள்... தரிசிக்கலாம் வாங்க
பத்ர சயனம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள வடபத்ரசாயி - ஆண்டாள் கோயில். இங்கு எம்பெருமான் ஸ்ரீரங்கமன்னார் பெருமாளாக வடபத்ர சயன கோலத்தில் காட்சி தருகிறார். பத்ர என்றால் ஆலமரத்து இலை என்று பொருள். இது 99வது திவ்ய தேசங்களில் ஒன்று.
மாணிக்க சயனம்
செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலையில் அமைந்துள்ள கோயில் தான் திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில். திருமால் ஸ்ரீ அரங்க நாயகி சமேத ஸ்ரீ அரங்கநாதர் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள பெருமாள் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளிலும் தரிசிக்கலாம். இது 61வது திவ்ய தேசங்களில் ஒன்று



பாம்பணை சயனம்
திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமால் 43வது திவ்ய தேசமாகும். இங்கு சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்த கோயில் அமைந்துள்ளது.
இங்கு பள்ளி கொண்ட நிலையில் இருக்கும் பெருமாள் அரைக்கண்ணை மூடிய நிலையில் இதழ்களில் மென்மையான நகைப்புடன் பாம்பணை மேல் வலது கரம் ஆதிசேசனை அணைத்தபடி காட்சி தருகிறார்.10. உத்தான சயனம்

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples










Post a Comment

0 Comments