பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் - தஞ்சாவூர்

 

பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் - தஞ்சாவூர்


சுவாமி : பிரசன்ன வெங்கடேச பெருமாள்.
அம்பாள் : ஸ்ரீ அலமேலுமங்கை.
மூர்த்தி : பத்மாவதித் தாயார். பஞ்சமுக ஆஞ்சநேயர்.

தலச்சிறப்பு : பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் 600 ஆண்டு பழமையானது. இங்கு மூலவராக வெங்கடாஜலபதி அருள்கிறார். தனிச் சந்நதியில் பத்மாவதித் தாயார். பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணுவின் தசாவதாரப் பெருமாள்களின் சந்நதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமர்சையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது அன்று காலை திருமஞ்சன சேவையும், இரவு திருவாரதனை, நாச்சியார் கோலத்துடன் பெருமாள் புறப்பாடு, பெருமாள் யதாஸ் தானம் சேர்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

அடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படும். ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதரராய் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு : தஞ்சாவூர் மானோம்புச்சாவடியில் உள்ள தேவி பூமிதேவி அலமேலுமங்கா சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் குடமுழுக்கு 2011 ம் ஆண்டு மார்ச் 23 புதன்கிழமை நடைபெற்றது. குடமுழுக்கு நிகழ்ச்சியையொட்டி, 2011 ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி நவநீத கிருஷ்ணர் சன்னதியில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டது. அதைத்தொடர்ந்து, பூஜைகள், மகாசாந்தி ஹோம பூஜைகள் நடைபெற்றன.

புதன்கிழமை காலை கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. பிறகு, தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை .

கோயில் முகவரி : அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில்,
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments