வேறு கிரகத்திற்கு செல்லும் வழி தஞ்சை பெரிய கோவிலில் உள்ளதா?
அறிவியல் கூற்றுப்படி இந்த பூமியானது மூன்று டைமென்ஷன் கொண்டது எனவும், இது தவிர வேறு உலகங்கள் பதினோரு டைமென்ஷன் வரை கொண்டது என்றும் கூறப்படுகிறது. அதே போல நாம் பூமியில் இருந்து வேறு உலகத்திற்கு செல்ல சில ரகசிய பாதைகள் உள்ளதாகவும். அதை நமது சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்துள்ளனர் என்றும், அந்த பாதை வழியாக சித்தர்கள் வேறு உலகங்களுக்கு பயணித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தற்போது கூட சித்தர்கள் பலர் அந்த பாதை வழியாக தான் பூமிக்கு வருகின்றனர் என்றும் இந்த பாதையானது தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் இருப்பதாகவும் அது கண்ணுக்கு தெரியாத ஒரு மாயையான பாதை என்றும் கூறப்படுகிறது. அந்த பாதை ஒருவர் கண்ணுக்கு தெரிந்தால் அவர் வேறு உலகத்திற்கு எளிதில் பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது போன்ற ஒரு பாதை தான் தஞ்சை பெரியகோவிலில் இன்றுவரை பாதுகாப்பாக உள்ளது என்றும் அந்த பாதை வழியாக பல மகன்கள் அவ்வப்போது அந்த கோவிலிற்கு வந்து இறைவனை தரிசித்து செல்கின்றனர் என்ற கூற்றும் நிலவுகிறது.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments