கந்த சஷ்டி கவசம் பலன்

முருக பெருமானுக்கு உகந்த நாட்களான செவ்வாய் கிழமைகளிலும் சஷ்டி மற்றும் முருகனுக்கு உகந்த இதர நாட்களிலும் இந்த கவசத்தை பாடினால் அதிக பலன்களை பெறலாம். சஷ்டியில் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கி கந்த சஷ்டி கவசம் அதை பாராயணம் செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அறிவியல் ரீதியாக பார்க்கையில் கந்த சஷ்டி கவசம் மனிதர்களின் உடலிற்கு ஒரு மிக சிறந்த கவசமாக விளங்குகிறது. இதற்க்கு நாம் கந்த சஷ்டி கவசம் அதில் வரும் வரிகளை உற்று நோக்கினால் புரியும். உதாரணத்திற்கு மார்பை இரத்தின வடிவேல் காக்க என்ற வரியை எடுத்துக்கொள்வோம். இந்த வரையை நாம் உச்சரிக்கையில் நமது மனமானதும் மூளையும் மார்பை உற்று நோக்கும். இதன் காரணமாக நமது மார்பில் ஏதாவது கோளாறு தென்பட்டால் நமது மூளையானது உடனே அந்த கோளாறை சரி செய்ய முயற்சிக்கும். இப்படி கந்த சஷ்டி கவசம் அதில் நமது உடலில் உள்ள பல பாகங்களின் பெயரை கூறி அதை முருகப்பெருமான் காக்க வேண்டும் என்று கூறுகிறோம். அப்படி கூறுகையில் நமது உடலில் பல பாகங்கள் நம்மை அறியாமலே சரி செய்யப்படுகிறது. ஒருவர் தொடர்ந்து ஒருமண்டலம் தினமும் இரண்டு முறை கந்த சஷ்டி கவசம் அதை கூறி வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகள் நீங்கும். மேலே கந்த சஷ்டி கவசம் வரிகள், கந்த சஷ்டி கவசம் பாடல் மற்றும் கந்த சஷ்டி கவசம் வீடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை பயன்படுத்தி கந்த சஷ்டி கவசம் அதை கூறி முருக பெருமானின் அருளை பெறலாம். உலகில் தோன்றி இன்று வரை தங்களின் பண்பாடு மற்றும் வாழ்வியலில் பெரிய அளவில் பிற கலாச்சாரங்களின் தாக்கமில்லாமல் இன்று வரை உயிர்ப்புடன் இருப்பது தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாடு ஆகும். அப்படிப்பட்ட தமிழர்களின் இறைத்தன்மை கொண்ட மொழியான “தமிழ்” மொழியில் இறைவனைப் போற்றி வணங்கும் சிறந்த பாடல்கள் பல உள்ளன. அதிலும் தமிழர்களின் “காக்கும் கடவுளான” “கந்தனாகிய” “முருகப்பெருமானுக்கு” பல பாடல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. அப்படி முருகப்பெருமானின் மீது இயற்றப்பட்டு அனைவராலும் பரவலாக அறியப்பட்ட பாடல் தான் “கந்த சஷ்டி கவசம்”
கந்த சஷ்டி கவசம் வரலாறு
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த “தேவார சுவாமிகளால்” எல்லாம் வல்ல அந்த முருகப் பெருமான் மீது இயற்றப்பட்டது தான் இந்த “கந்த சஷ்டி கவசம்”. இந்த கந்த சஷ்டி கவசப் பாடல் உண்மையிலே ஒரு மிகச் சிறந்த படைப்பாகும். ஏனெனில் சிறந்த முருகப் பெருமான் பக்தராகிய அருணகிரி நாதர் அந்த முருகனின் புகழைக் கூறும் தெய்வீகமான “திருப்புகழ்” என்ற பாடல்கள் கொண்ட தொகுப்பை இயற்றிய பிறகு அவரைப்போலவே ஒரு தெய்வீகத்தன்மை கொண்ட இந்த கந்த சஷ்டி கவசத்தை இயற்றியுள்ளார் தேவார சுவாமிகள். இந்த கந்த சஷ்டி கவசம் பாடல் முதன் முதலில் “திருச்செந்தூரின்” கடற்கரையில் அரக்கர்களை வதம், புரிந்து அங்கே “செந்திலாண்டவராக” ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் முருகப்பெருமானின் சந்நிதியில் முதன் முதலாக பாடப்பட்டு, அரங்கேற்ற பட்டதாக கூறப்படுகிறது. இந்த கந்த சஷ்டி கவசம் தெய்வாம்சம் கொண்ட தமிழ் மொழியை கற்பதற்கு ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில் இந்த சஷ்டி கவசம் பாடல் முழுவதும் நாம் அன்றாடம் பேசுவதற்கு பயன்படும் பெரும்பாலான தமிழ் மொழியின் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் சில “செந்தமிழ்” எனப்படும் தூய தமிழ் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. கந்த சஷ்டி கவசம் அதை நாம் தொடர்ந்து சத்தமாக படித்து வரும் போது, நாம் பேசும்போது நமக்கு எளிதில் உச்சரிக்க வராத தமிழ் வார்த்தைகளை நாம் நன்கு உச்சரிக்க கற்றுக்கொள்ளலாம். மேலும் தமிழ் மொழியின் “இலக்கணம், எதுகை- மோனை, நடை, சந்தம்” போன்றவற்றை கற்றுக்கொள்வதற்கு ஒரு சிறந்த வழி இந்த கந்த சஷ்டி கவசம் பாடல் அதை படிப்பதாகும்.
கந்த சஷ்டி கவசம் மந்திரம்
கந்த சஷ்டி கவசம் சிறந்த ஒரு மந்திர அதிர்வுகளைக் கொண்ட பாடலாக இருக்கிறது. தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் கடவுளாகிய முருகப் பெருமானை முதன்மைக் கடவுளாகக் கொண்டு, சில சித்தர்கள் அம்முருகப்பெருமானுக்கு கோவில்களையும் அம்முருகனைப் போற்றி சில பாடல்களையும் அப்பாடல்களில் வடமொழியான சமஸ்கிருதத்திற்கு நிகரான “தெய்வீக மற்றும் நேர்மறையான” அதிர்வுகளைக் கொண்ட பல தமிழ் எழுத்துக்களை அவர்களின் பாடல் வரிகளில் பயன்படுத்தியிருப்பர். அந்த சித்தர்களின் மரபை பின்பற்றிய இந்த புலவரும் மந்திர அதிர்வுகளைக் கொண்ட பல தமிழ் எழுத்துக்களை இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார். காந்தி சஷ்டி கவசம் பாடலை தொடர்ந்து காலை மாலை வேளைகளில் பாடி வர நமக்கு நமது உடலில் அனைத்து பகுதிகளிலும் இப்பாடலின் மந்திர அதிர்வுகள் ஊடுருவி சென்று நமது உடலிலும் மனத்திலும் ஒரு நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தும்.மேலும் நவ கோள்களின் தீய பலன்கள் நமக்கு ஏற்படாமல் காக்கும். கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்திகள், பிறரின் பொறாமை, வஞ்ஜக எண்ணங்கள், பிறர் நமக்கு செய்த பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளிலிருந்து நம்மை காக்கும்.
கந்த சஷ்டி கவசம் அறிவியல் கந்த சஷ்டி கவசம் அறிவியல் பூர்வமாக இயற்றப்பட்ட ஒரு பாடலாக கூடக் கூறலாம். ஏனெனில் இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது. எனவே இந்த கந்த சஷ்டி கவசப் பாடலை 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பாடச் செய்வதின் மூலம் அவர்களின் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். அக்குழந்தைகளிடம் புதியவற்றை உருவாக்கும் படைப்பாற்றல் உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் திக்கு வாய் மற்றும் பேச்சாற்றலில் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளை இந்த கந்த சஷ்டி கவசம் பாடலை அவ்வப்போது வாய்விட்டு படிக்க ஊக்குவிப்பதின் மூலம், அவர்களின் அத்தகைய குறைபாடுகள் நீங்குவதை நாம் காண முடியும். கந்த சஷ்டி கவசம் பாடலை மாதந்தோறும் வரும் வளர்பிறை சஷ்டி தினத்தன்று பாடுவதால் அந்த முருகப்பெருமானின் அருளால் நம் வாழ்வில் நமக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்து துன்பங்களும். நீங்கும். மேலும் முருகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில், காலையில் வீட்டிலோ அல்லது முருகனின் சந்நிதியிலோ பாராயணம் செய்வது மிகுந்த நன்மைகளைத் தரும். மேலும் “கார்த்திகை” மாதத்தில் வரும் “கந்த சஷ்டி விரத” காலத்தில் காலையில் குளித்து, முடித்து விட்டு வீட்டின் பூஜையறையில் அமர்ந்து முருகனின் படத்திற்கு பூக்கள் சூட்டி, தீபமேற்றி முருகனை மனதார தியானித்து, கந்த சஷ்டி கவசம் பாடலை பாடி வர, அவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் அந்த கந்தனாகிய முருகப் பெருமான்.
0 Comments