ஆயிரம் ஆண்டுகளை கடந்த தஞ்சை பெரிய கோவில்
ராஜராஜ சோழன் உலகிற்கு விட்டுச்சென்ற மிகப்பெரிய சொத்து ‘தஞ்சை பெரிய கோவில்’. தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில், வலது புறம் கல்லணைக் கால்வாய், இடதுபுறம் சிவகங்கை பூங்கா, முன்புறம் ராஜா மிராசுதார் மருத்துவமனை இவைதான் பெரிய கோவிலின் தற்போதைய எல்லைகள்.
“பிரகதீஸ்வரர் கோவில்” என வடமொழியிலும், “பெருவுடையார் ஆலயம்” என தமிழிலும் அழைக்கப்படும் இக்கோவில் கட்டப்படும் முன்பு இந்த இடத்தில் நைமி சாரண்ய முனிவர்கள் வாழ்ந்து வந்ததாக புராண வரலாறு கூறுகிறது. சுற்றுப்புறத்தில் மலைகளே இல்லாத நிலையில் முழுக்க முழுக்க கருங்கல்லால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது, இதன் சிறப்புகளில் ஒன்று.
ராஜராஜன் இந்த கோவிலை கி.பி.1004-ல் தொடங்கி ஆறு ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளான். 1010-ம் ஆண்டு முதல்முறையாக இந்தகோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது. இந்த கோவில் வானில் உள்ள கயிலாய மலையின் அமைப்பை போன்று கட்டப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகின்றனர்.
216 அடி உயரமுள்ள விமானம் மகாமேரு மலையாக வடிக்கப் பெற்றுள்ளது. அதன் கீழ் திசை சிகரத்தில் சிவபெருமான், உமாதேவி, குமாரர்கள், பிறதெய்வங்களின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது 1000 ஆண்டுகளை கடந்த பிறகும் தஞ்சை பெரிய கோவில் காண்போரை கவரும் வகையில் கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments