வரலாற்று புகழ் பெற்ற கங்கை கொண்ட சோழபுரம்
பிரகதீஸ்வரர் ஆலயம்
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் என்ற பெயரைக் கொண்ட இந்த மூலவர், பிரகதீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறார். இந்த லிங்கமானது 13.5 அடி உயரத்தையும் 60 அடி சுற்றளவும் கொண்டது. லிங்கத்தை சுத்தி படிக்கட்டுகள் அமைத்து அதன்மீது ஏறி தான் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த லிங்கமானது ஒரே கல்லால்லானது. இந்தக் கோவிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சிலையும் 9.5 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இங்கு உள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்த்தப்பட்டு உள்ளது.
பகல் நேரங்களில் தினமும் சூரிய ஒளியானது நந்தியின் மீது பட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிக்கிறது. அந்த சமயத்தில் மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகள்யாவும் அணைக்கப்பட்டு, இந்த சூரிய ஒளியின் மூலம் சிவனை தரிசிப்பது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மற்றொரு சிறப்பு இந்த கோபுர கலசத்தின் நிழல் கீழே விழாமல் இருப்பது. கோவில் மூலவரின் லிங்கத்தின் அடியில் சந்திரகாந்தா என்னும் கல் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கல்லானது குளிர்காலத்தில் குளிரை கட்டுப்படுத்தி மிதமான வெப்பத்தையும், கோடைகாலத்தில் வெயிலை கட்டுப்பட்டி மிதமான குளிரையும் கொடுக்கிறது. லிங்கத்திற்கு அணியப்படும் வஸ்திரங்கள் தனியாக நெய்யப்படும்.
தல வரலாறு
தஞ்சை பெரிய கோவிலுக்கும், கங்கைகொண்ட சோழபுரத்திற்க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மகனாக பிறந்தவர்தான் ராஜேந்திரசோழன். தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோவிலை விட கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது தான் மகனின் நோக்கமாக இருந்தது. அதற்காக கட்டப்பட்ட கோவில் தான் கங்கை கொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோவில். தன்னிடம் போரில் தோற்ற மன்னர்களின் கைகளால் கங்கையிலிருந்து நீரானது எடுத்து வரப்பட்டு, லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனால் இந்த ஊர் ‘கங்கை கொண்ட சோழபுரம்’ என்ற பெயரைப் பெற்றது.
சிவனுக்கு அபிஷேகம் செய்யும் அந்த நீரினை, கோவிலுக்குள்ளேயே ஒரு கிணறு தோண்டி அபிஷேக நீர் அதில் ஊற்றுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல்பகுதியில் ராஜ ராஜேந்திரனின் சிம்மாசனமான சிங்கத்தின் சிலையை உருவாக்கினான். சிவனை தரிசனம் பெற கோவிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்துக் கொண்டே தரிசனத்திற்கு செல்வார் மன்னர்.
பலன்கள் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையவும், பதவி உயர்வு வேண்டியும், இடமாற்றம் வேண்டியும், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் வேண்டியும் இந்த கோவிலில் உள்ள துர்க்கை யிணை பிரார்த்தனை செய்தால் உடனே நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு உள்ள சிவனுக்கு 25 மீட்டர் நீளமுள்ள வேட்டியும், 14 அடி உயர மாலையும், அம்மனுக்கு ஒன்பது கஜ புடவையும் சாத்துவது வேண்டுதலில் சிறப்பானது.
தரிசன நேரம்: காலை 6.00AM – 12.00PM மாலை 4.00PM – 8.00PM
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments