அனுமன் வந்து சென்ற அதிசய கோவிலில் இன்றும் நடக்கும் அற்புதம் தெரியுமா?

 அனுமன் வந்து சென்ற அதிசய கோவிலில் இன்றும் நடக்கும் அற்புதம் தெரியுமா?


ராம பக்தரும், இந்துக்களில் ஒரு பகுதியினர் வழிபடும் கடவுளுமான அனுமனுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவெங்கிலும் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட கோவில்கள் மிகவும் சிறப்பானவையாக இருக்கும். அவற்றிலும் சில அற்புதங்கள் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு அனுமன் கோவிலுக்கு தான் இன்று நாம் செல்லவிருக்கிறோம். இந்த கோவிலுக்கு சென்றால் சொல்லிவைத்தமாதிரி அடுத்த மாதத்திலேயே திருமணம் நடக்கிறதாம். வாருங்கள் இந்த கோவில் பற்றியும், அங்கு செல்வது எப்படி என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

அனுமனின் தாய் அனுமன் சிறு வயதிலிருந்தே மிகவும் பலமானவராகவும், ராம பக்தராகவும் திகழ்ந்தவர். அவர் தாய்க்கு இருந்த சக்தி அனுமனுக்கும் இருந்ததாக புராணம் கூறுகிறது. அதன்படி பார்க்கையில், அனுமனின் தாய்க்கு சஞ்சீவனி மூலிகையைப் பற்றி தெரிந்திருக்கிறது. அதை அவர்தான் அனுமனுக்கு கற்றுக் கொடுத்துள்ளார் என்கின்றன சில புராணங்கள். வேறு சில புராணங்களோ வைத்தியர் ஒருவரின் சொல்படி அனுமன் பறிக்கச் சென்றார் என்றும் கூறுகிறது. இந்த சஞ்சீவினி மூலிகை ஒருவரது ஆயுளை நீட்டிக்கும் தன்மை கொண்டது எனவும் கூறுகின்றனர். அப்படி மூலிகைக்கு இருக்கும் சக்தி, அனுமனுக்கும் இருக்கிறது. அதுவும் தமிழகத்தில் ஒரு கோவிலில்.

அந்த கோவில் எது? 

திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோயில். இது ஒரு சிவன் கோவில் ஆகும். அடடே.. சிவன் கோவிலுக்கும் அனுமனுக்கும் என்ன சம்பந்தம். அனுமன் ராமபக்தன் அல்லவா என்று சிலர் கேட்கலாம். ஆம். அனுமன் வழிபட்ட அதுவும் அனுமனே தன் கையால் செய்த லிங்கம் இந்த கோவிலில் இருக்கிறது. இன்னும் நிறைய பெருமைகளை கொண்ட இந்த கோவில் எங்கே இருக்கிறது தெரியுமா?

எங்கே இருக்கிறது? 

காவிரி வடகரைத் தளங்களில் அமைந்துள்ள 26 வது சிவ தலமான அப்பரால் பாடல் பெற்ற இந்த சிவன் கோவில், நாகப்பட்டினம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. அந்த ஊரின் பெயர் வடவாஞ்சார் என்பதாகும். இந்த கோவிலின் மகிமைகளுள் ஒன்று இங்கு கிடைக்கும் பிரசாதம் சஞ்சீவினி மூலிகைக்கு ஒப்பானது என்பது.

எப்படி செல்வது 

மயிலாடுதுறையிலிருந்து இந்த இடம் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது. இந்த ஊரில் இருக்கும் இந்த கோவில் சிவன் கோவில் என்றாலும், இதற்கு ஒரு புகழ் இருக்கிறது. அதுதான் அனுமன் வந்து வழிபட்ட தலம் இது என்பதாகும்

ஒரே மாதத்தில் திருமணம் நீண்ட நாட்களாக திருமணம் நடக்கவில்லையா? திருமணம் தடை படுகிறதா... தள்ளிப்போகிறதா. செவ்வாய் தோஷம் ராகு கேது தோஷங்கள் அச்சுறுத்துகிறதா? இன்றிலிருந்து ஒரு வருடம் மாதம் ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று வந்தால் அடுத்த மாதமே நிச்சயம் திருமணம் நடக்கும் என்கிறார்கள் இந்த ஊர் பெரியவர்கள். அட சிறப்புதான் இல்லியா? தஞ்சை சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த கோவிலுக்கு செல்வது எளிது. மற்ற ஊர்களிலிருந்து வருவது கொஞ்சம் சிரமம். என்றாலும் இந்த கோவில் ஏன் இத்தனை சிறப்பாக இருக்கிறது சொல்லுங்கள் பார்க்கலாம். அது அனுமனின் சக்தி. சிவலிங்கம் அமைத்த அனுமன் கோவிலின் முதல் பூசையாக அவரே செய்தார் என்பதும் தொன்நம்பிக்கை.


வழித்தடங்களைப் பார்க்கலாம்

 இந்த ஊருக்கு மூன்று வழித்தடங்களின் வழியாக செல்லமுடியும். 1 தேசிய நெடுஞ்சாலை எண் 257 வழி 2 ஆனதாண்டவபுரம் வழியில் 3 வைத்தீஸ்வரன் கோவில் வழியாக

தேசிய நெடுஞ்சாலை எண் 257 வழி மயிலாடுதுறையிலிருந்து சரியா 15.9 கிமீ தூரத்தில் இருக்கிறது இந்த ஊர். இதற்கு 35 நிமிடங்கள் வரை பயண நேரம் ஆகும். நிடூர், வில்லியநல்லூர், தலைஞாயர் வழியாக இந்த ஊருக்கு பயணிக்கலாம்.


ஆனதாண்டவபுரம் வழியில் 

மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் வழியாக செல்வதாக இருந்தால், அங்கும் இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழியில் நந்தி சிலை கடந்து, ஆனதாண்டவபுரம் வரைச் சென்று அங்கிருந்து மேற்கு திசையில் பயணித்தால் சிறிது நேரத்தில் முந்தைய வழி வந்துவிடும். இரண்டாவது வழி நேராக செல்லும். ஆனதாண்டவபுரம் தாண்டி, செத்தூர் வரை பயணிக்கும் இந்த வழித்தடம் அங்கிருந்து தலைஞாயர் வழி வடவாஞ்சார் ஊருக்கு செல்லும். இது சற்று குழப்பமான வழியாக நீங்கள் கருதினால் அருகில் வழி கேட்டுச் செல்லவும்.

வைத்தீஸ்வரன் கோவில் வழி இது முழுவதும் நவீன சாலை வசதிகளுடன் கூடிய வழித்தடம். ஏனென்றால் இது மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் முதன்மை சாலை. மணக்குடி , நத்தம், தர்மநாதபுரம் வழியாக வைத்தீஸ்வரன் கோவிலை அடையலாம். அங்கிருந்து செத்தூர் தலைஞாயர் வழியாக வடவாஞ்சாரை அடையமுடியும்


அருகிலுள்ள முக்கிய கோவில்கள் 

கற்கோவில், பெருமங்களம், வைத்தீஸ்வரன்கோவில், கைலாசநாதர் சிவன்கோவில், கடைக்குடி அம்மன் கோவில், முத்தாச்சி மகா காளியம்மன் என இன்னும் ஏகப்பட்ட கோவில்கள் இங்கு காணப்படுகின்றன.


Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

\


Post a Comment

0 Comments