சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் மகா சங்கடகரசதூர்த்தி... இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்
விநாயகருக்கு பூஜை செய்து வழிபட சிறப்பான நாளாக சங்கடகர சதூர்த்தி பார்க்கப்படுகின்றது.
சங்கடம் என்றால் துன்பம், ஹர (கர) என்றால் அறுப்பவன், சதூர்த்தி என்றால் அமாவாசை, பெர்ணமிக்கு பின்னர் வரும் நான்காவது நாள் என்று பொருள்.
என்ன பலன்கள்:
இந்த சங்கடகரசதூர்த்தியில் விரதம் இருந்து பூஜைகள் மற்றும் வழிபாடு செய்தால் ஒரு வருடத்தில் இருந்த விரத பலன்கள் கிடைக்கும் என முன்னோர்கள் கூறுவதுண்டு.
குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருமணத்திற்காக காத்திருப்போர் இந்த விரதம் இருந்தால் திருமணம் நடக்கும்.
வழிபடும் முறை:
பொதுவாக விரதம் இருக்கும் நாளில் செய்வது போல, காலை எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று விநாயகரை வணங்கி 11 முறை வலம்வர வேண்டும்.
விநாயகருக்கு அருகம்புல் அல்லது எருக்கம் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் அவசியம்.
பால், கற்கண்டு, உலர்ந்த திராட்சை இவற்றில் ஏதேனும் ஒரு பழம் கொண்டு சென்று கொடுக்கலாம், முடிந்தால் ஏதேனும் நெய்வேத்தியம் (சுண்டல், கொழுகட்டை) செய்து கொடுக்கலாம்.
இன்று 11 அல்லது 13 அகல்விளக்கு ஏற்றி விநாயகரை வழிபடுவது மிகவும் விசேசம்.
விளக்கிறக்கு சந்தனம், குங்குமம் வைத்து, எண்ணெய் ஊற்றிய பின்னர் திரி போடவும். (இதுதான் சரியான் விளக்கேற்றும் முறை).
அடுத்த சங்கடகரசதூர்த்தி நாளில் 12, அடுத்து 11, அடுத்து 10 என ஒவ்வொன்றாக குறைத்து வர நம் சங்கடங்கள் குறையும் என்பது வழக்கம்.
விளக்கு ஏற்றும் போது உங்களுக்கு உள்ள சங்கடங்களை இறைவனிடம் கூறி வேண்டிக்கொண்டே ஏற்றலாம்.
இப்படி செய்தால் உங்களின் சங்கடங்களை தீர்த்து விநாயகர் உங்கள் வாழ்வில் ஒளியை ஏற்றி வைப்பார்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments