வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ நாக தேவதை அம்மன் கோயில் வரலாறு
வேலூர் மாநகருக்கு பெருமை சேர்க்கும் வேலூர் கோட்டையின் உள்ளே காவலர் குடியிருப்பு பக்கத்தில் ஸ்ரீ நாக தேவதை அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆலமரத்து அடியில் உள்ள புற்றில் அம்மன் வீற்றிருந்தாள். அதிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தாள். தொடர்ந்து அம்மனை வழிபட சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஸ்ரீ நாக தேவதைக்கு கோயில் கட்டப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு பிரதி செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு கால பூஜையும் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது. இது அம்மன் உத்தரவுபடி நடக்கிறது. இதே பகுதியில் காவலர் மருத்துவமனையும் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு வரும் அனைவரும் நாகதேவதை அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் நாகதேவதை அம்மனை வழிபட்டு தங்களின் வேண்டுதல்களை முன்வைக்கின்றனர். அம்மனின் அருள் புரிந்த வேலூரைச் சேர்ந்த மக்களும் சிறப்பு நாட்களில் அம்மனை தரிசித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இந்த கோயிலின் ஸ்தல விருட்சம் ஆலமரம் ஆகும்.
ஊஞ்சல் சேவை
அபிஷேகம் முடிந்து அம்மனை அலங்கரித்து, ஊஞ்சலில் அமர்த்தி, அம்மனைதாலாட்டி பக்தர்கள் பரவசம் அடைகிறார்கள். இதில் பங்கேற்பவர்களுக்கு புத்திர பாக்கிய தடை விலகி அம்மனின் அருள் கிடைக்கிறது என்பது வேண்டுதலில் பலனடைந்த பக்தர்களின் அசைக்கமுடியாத வாக்குமூலம்.
அமாவாசை சிறப்பு பூஜை
நாக தேவதை அம்மன் கோயிலில் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் அம்மனுக்கு யாகம் வளர்த்து மிக சிறப்பான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அம்மாவாசை பூஜையின் சிறப்பு
ஏவல், பில்லி, சூனியம், நீண்ட நாள் வியாதி, பகைவர்களால் தொல்லை, வியாபார தடை விலகும். அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.
பௌர்ணமி பூஜை
கோயிலில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் அம்மனுக்கு யாகம் வளர்த்தசிறப்பான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
பௌர்ணமி பூஜையின் சிறப்பு
அன்று மாலை ஸ்ரீ நாக தேவதை அம்மன் உற்சவர் சிலைக்கு பக்தர்கள் தங்களகைகளாலேயே பால் ஊற்றி அபிஷேகம் செய்வது மிகச் சிறப்பு.பூஜையில் கலந்துகொண்டு வேண்டுதல் நிறைவேற கோரிக்கை வைக்கும் பக்தர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது இந்த கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடும் அனைத்து பக்தர்களும் அறிந்ததே.
ராகு கேது சிறப்பு பூஜைகள்
நாகதோஷம் உள்ளவர்கள் கோயிலுக்கு வந்து சர்ப்ப சாந்தி, நாகர் பூஜை, சிறப்பு ஹோமத்துடன் சிறப்பு பூஜைகளை நடத்தினால் சகல தோஷங்களும் விலகி அம்மன் அருள் பெற்று வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வார்கள். இது இந்த பூஜையில் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்று தங்கள் வாழ்க்கையில் பயனடைந்தவர்கள் நம்பிக்கையான வார்த்தைகள்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments