அருள்மிகு ஜெயன்கொண்ட சோழீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக ஜெயங்கொண்ட சோழீஸ்வரர் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் ஜெயன்கொண்ட சோழீஸ்வரர் என்றும், அம்மன் சௌந்தர நாயகி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். கோயிலின் தீர்த்தம் சோழ தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாக இது இருக்கிறது. பாண்டிய மன்னர்களின் காருண்யபாண்டிய மன்னன் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
தல புராணங்களின் படி தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை பற்றி முறையிட சிவபெருமானிடம் சென்ற சமயம் சிவபெருமான் தவத்தில் இருந்தார். சிவபெருமானின் தவத்தை கலைக்க அஞ்சிய தேவர்கள் இன்பத்திற்கு அதிபதியாகிய மன்மதனை சிவனின் தவத்தை கலைக்க நிர்பந்தித்தனர். வேறுவழியின்றி மன்மதனும் தேவர்களின் ஆணைக்கிணங்க சிவனின் தவத்தை களைய, கோபம் கொண்ட சிவன் தந்து நெற்றிக்கண் திறந்து மன்மதனை அழித்து அவனை வெற்றிகொண்டதால் இங்கிருக்கும் சிவன் ஜெயங்கொண்ட சோழீஸ்வரர் என்கிற பெயர் உண்டாயிற்று.
அருள்மிகு ஜெயன்கொண்ட சோழீஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள் இக்கோயிலின் முன்பாக 66 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜாகோபுரம் உள்ளது. மற்ற சிவாலயங்களில் தெற்கு நோக்கி காட்சிதரும் பைரவர் இங்கு மேற்கு திசை நோக்கி நின்றவாறு அருள்பாலிக்கிறார். ஜெயங்கொண்ட விநாயகர், வில்லேந்திய முருகன், விசாலாட்சி, கஜலட்சுமி போன்ற தெய்வங்களுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. கோயில் முன்புள்ள சோழ தீர்த்தத்தில் நீராடி சுவாமி அம்பாளை வழிபடுவதால் திருமண தடை, புத்திர பாக்கியம் கிடைக்கப்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
மாணவர்கள் கல்வியில் முதல் இடம் பெறவும், தொழில் அதிபர்கள் தங்களின் தொழில்களில் ஏற்படும் இடையூறுகள் நீங்கவும், வேலைவாய்ப்பு தேர்வுகளில் வெற்றியுண்டாகவும் இங்கு வழிபடுகின்றனர். இங்கு சுவாமி, அம்பாள், விநாயகர், நந்தி, கல்யாணசுந்தரர், உற்சவமூர்த்தி, பைரவர் ஆகிய ஏழு தெய்வங்களுக்கும் மாலை சாற்றி வணங்க வேண்டும். பலன் கிடைத்த உடன் குடும்பத்தோடு கோயிலுக்கு சென்று சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். கோயில் அமைவிடம் அருள்மிகு ஜெயன்கொண்ட சோழீஸ்வரர் திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் நேமம் என்கிற ஊரில் அமைந்துள்ளது.
கோயில் நடை திறப்பு
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.
கோயில் முகவரி
அருள்மிகு ஜெயன்கொண்ட சோழீஸ்வரர் திருக்கோயில் நேமம் புதுக்கோட்டை மாவட்டம் தொலைபேசி எண் 4577 – 264190
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments