என் அன்பு குழந்தையே!!!


வாழ்க்கையில் நடைப்போட துணை வேண்டும் ஆனால் அவைகள் உன்னோடு இறுதி வரை வர போவதில்லை !
நீ இந்த உலகிற்கு எப்படி வந்தாயோ அதை போலவே தான் அவர்களும் ,அதனால் ஒருவர் காயப்படுத்தினால் நீ நகன்று விடு இந்த பிறவியோ நீ எடுத்த பொக்கிஷம் !
அதை உன்னை நேசிப்பவருக்கு மத்தியில் பகிர்ந்துக் கொள் உன் வாழ்க்கையின் நேரங்களை அதற்காக உனக்கு பிடித்தவர்கள் மட்டுமே உன்னை சூழ்ந்து இருப்பதில்லை,
எதிர்மறையாய் சந்தித்தாலும பொறுமையுடன் நீ நகன்று செல் !
உனக்கு பிடித்தவர்கள்
சந்தோஷமாய் இருந்தார்கள் என்றால் அவர்களின் அனைத்து விஷயங்களையும் நீ ஏற்றுக்கொண்டு அவர்களிடத்தில் நீ பொறுமையுடன் செல்கிறாய் என்பது அர்த்தம் !
உன்னை சுற்றிலும் உனக்கு பிடித்தவர்கள் இருந்தால் அவர்கள் உனக்காக தியாகம் செய்கின்ற விஷயங்களில் இருக்கும் !
இவற்றை ஆராய்ந்து எல்லாரும் மத்தியில் எப்படி வாழ வேண்டும் என்று சிந்தித்து நட,சில உறவுகள் சந்தோஷம் நிம்மதியையும் கொடுக்கும் சில உறவுகள் மனவலி நம்பிக்கை துரோகம் என வாழ்க்கையில் பொக்கிஷமான பாடங்களை உனக்கு புகட்ட எப்படி நேர்ந்து இருக்கும் என புரிந்துக் கொள் !

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples


Post a Comment

0 Comments