சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்

 சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்


சிதலப்பதி முத்தீசுவரர் கோயில் (திலதைப்பதி) திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 58ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார்.

இந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் வட்டத்தில் சிதலப்பதி எனும் ஊரில் அமைந்துள்ளது.

தலவரலாறு

திருமாலின் அவதாரமான இராமன் மற்றும் லட்சுமணர் தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயு ஆகியோருக்கு இத்தலத்தில் எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தனர். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கம் முக்தீஸ்வரர் என்றும் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றும் கூறப்படுகிறது. (திலம் என்றால் எள் என்று பொருள்)

அமைப்பு

வாசலில் சிறிய கோபுரம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் விநாயகர், ராமர், பிதுர் லிங்கங்கள், நற்சோதி மன்னர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், காசி விசுவநாதர், நாகர், கஜலட்சுமி, மந்தராவனேஸ்வரர், நவக்கிரகம், நால்வர், பைரவர், சூரியன், சந்திரன், ஸ்ரீதேவி பெருமாள் பூதேவி ஆகியோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு இடது புறமாக சுவர்ணவள்ளி அம்மன் சன்னதி உள்ளது.


வழிபட்டோர்

சூரியன், சந்திரன், யானை, சிங்கம், ஸ்ரீராமர், லட்சுமணர் முதலானோர்

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments