வேதபுரி தட்சிணாமூர்த்தி திருக்கோயில் சிறப்புக்கள்
நான்கு வேதங்களை அடிப்படையாக கொண்டே பாரதத்தில் இந்து மதம் தோன்றியது. அக்காலத்தில் இந்த நான்கு வேதங்களையும் நன்கு கற்று, அவ்வேதங்களில் கூறப்பட்டுள்ள முறைகளை பின்பற்றி வாழும் மனிதர்களே வேதியர்கள் என அழைக்கப்பட்டனர். நவகிரகங்களில் கல்வியறிவு, ஞானம் போன்றவற்றிற்கு அதிபதியான குரு பகவானின் அம்சம் கொண்ட வேதபுரி “அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் சிறப்புக்கள்” பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வேதபுரி தட்சிணாமூர்த்தி திருக்கோயில் வரலாறு
சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயில் பாண்டிய மன்னர்களுக்கு பிறகு இப்பகுதியை ஆட்சி புரிந்த அரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இங்கு வாழும் பக்தர்கள் அனைவரின் முயற்சியாலும் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் பிரதான மூலவர் நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் அம்சம் கொண்ட தட்சிணாமூர்த்தி ஆவார். இவர் இங்கு பிராக்ஞா தட்சிணாமூர்த்தி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். முற்காலங்களில் வேதியர்கள் அதிகம் வாழ்ந்து வந்த போது எப்போதும் வேத பாராயணங்கள் நடைபெற்றதால் இந்த ஊருக்கு வேதபுரி என்ற பெயர் ஏற்பட்டது என சிலர் கூறுகின்றனர்.
வேதபுரி தட்சிணாமூர்த்தி திருக்கோயில் இக்கோயிலில் மூலவரான பிராக்ஞா தட்சிணாமூர்த்தி 9 ஆதி உயரத்தில் தெற்கு திசை பார்த்தவாறு இருக்கிறார்.கருவறையின் விமானத்தில் பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் நிறுவப்பட்டுள்ளன.இக்கோயிலில் பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் உடைக்கும் விதி பின்பற்றப்படுகிறது. மேலும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலைக்கு பதிலாக, அதை பொட்டலமாக சமர்ப்பிக்கும் படி பக்தர்கள் கோயில் நிர்வாகத்தவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இக்கோயிலில் தினமும் 5 கால பூஜைகள் நடக்கிறது. விஷேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வியாழக்கிழமைகளில் இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி பகவானை வழிபட பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இக்கோயிலில் வியாழக்கிழமையன்று திருமண வரம், பிள்ளை வரம் ஆகியவற்றை வேண்டுபவர்களுக்கு அவை நிச்சயம் கிடைக்கும் என்றும், குழந்தைகள் கல்வி கலைகளில் சிறக்க, விரும்பிய காரியங்கள் நடக்க இங்கு வழிபட்டால் அது உறுதியாக கிடைக்கப்பெறுவர்கள் என அனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர்.
கோயில் அமைவிடம் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் தேனி மாவட்டத்தில் இருக்கும் வேதபுரி என்கிற ஊரில் அமைந்துள்ளது.
கோயில் முகவரி அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் வேதபுரி தேனி – 625531 தொலைபேசி எண் 4546 – 253908
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments