வல்லக்கோட்டை முருகன் கோவில் சிறப்பு!
தமிழகத்திலேயே இக்கோவிலில் இருக்கும் முருகன் 7 அடி முருகன் சிலை தான் மிகப்பெரிய முருகன் சிலை ஆகும்.
வல்லான் என்கிற அரக்கன் தேவர்களை சித்திரவதை செய்ததாகவும், முருகப்பெருமான் அவனை வீழ்த்தி இவ்விடத்தில் அமைதியை நிலைநாட்டியதாகவும், அவரை பெருமைபடுத்தும்படி இந்த கோவில் கட்டப்பட்டதாகவும் புராணங்கள் கூறப்படுகிறது.
இக்கோவிலில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கு
வஜ்ர தீர்த்தம் என்னும் தொட்டி இருக்கிறது, இது இந்திர தேவனுடைய வஜ்ராயுதத்தினால் உருவாக்கப்பட்டது என்றும், சுப்ரமணிய ஸ்வாமியை வழிபடுவதற்காக இந்திரன் இந்த தொட்டியை பயன்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது.
மேலும் இக்கோவில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 9 கி.மீ. தொலைவில் இருக்கும் வல்லக்கோட்டை எனும் ஊரில் அமைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி இக்கோவில் 1200 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments