இந்தக் கடவுளை இத்தனை முறைதான் சுற்றி வலம் வரவேண்டும். மாற்றி சுற்றினால் ஒரு பயனும் இல்லை.

 இந்தக் கடவுளை இத்தனை முறைதான் சுற்றி வலம் வரவேண்டும். மாற்றி சுற்றினால் ஒரு பயனும் இல்லை.



நமக்கு உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே நாம் இறைவனை நோக்கி கோவிலுக்கு செல்கின்றோம். அப்படி சென்று வழிபடும்போது நம் அனைத்து குறைகளும் நிறைவேற்றப்படும்  என்ற நம்பிக்கையோடு தான் வழிபடவேண்டும். நாம் செய்யும் வழிபாடானது சரியான முறையில் உள்ளதா என்ற சந்தேகங்கள் பலருக்கு உண்டு. அப்படிப்பட்ட சந்தேகங்களில் ஒன்று தான் எந்தெந்த இறைவனை எத்தனை முறை சுற்றி வலம் வர வேண்டும் என்பது. இந்த சந்தேகத்திற்கான தீவினைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

பிரகாரத்தை வலம் வருவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இன்றைய நாட்களில் நாம் கோவிலுக்கு சென்றால் நம் இஷ்டம்போல், நம் சௌகரியத்துக்கு தகுந்த வகையில், ஒரு சுற்று அல்லது மூன்று சுற்று சுற்றிவிட்டு வந்து விடுவோம். அந்த முறையானது சரியா என்று கேட்டால், அது சரியான முறை அல்ல. அந்தந்த  இறைவனை அந்தந்த பிரகாரத்தில் எப்படி சுற்றிவர வேண்டும் என்று வரைமுறையை நமக்கு நம் முன்னோர்கள் கூறி விட்டு தான் சென்றுள்ளார்கள். ஆன்மீகத்தில் நம் இறைவழிபாட்டில் அதற்கான முறைகளோடு தான் நாம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை நாம் பின்பற்றுவதே சிறந்தது.

நாம் பிரகாரத்தை வலம் வரும்போது இடமிருந்து வலமாகத்தான் வலம்வர வேண்டும்.  முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை நாம் ஒரு முறை வலம் வரவேண்டும். ஈஸ்வரனையும், அம்பாளையும் மூன்று முறை வலம் வரவேண்டும். அரச மரத்தை ஏழு முறை சுற்றி வலம் வருவது நல்லது. மகான்களின் சமாதி ஆக இருந்தால் அதை நான்கு முறை சுற்றி வலம் வர வேண்டும். நவக்கிரகங்கள் என்றால் ஒன்பது முறை சுற்றிவர வேண்டும். சூரியனை இரண்டு முறை சுற்றி வலம் வருவது நல்லது. சூரியனை வழிபடும் போது நமக்கு நாமே இரண்டு முறை சுற்றிக் கொள்ள வேண்டும். தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்கும் போது நான்கு முறை வலம் வரவேண்டும். முருகப்பெருமானை ஆறு முறை சுற்றி வலம் வரவேண்டும்.

முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் இப்படிபட்டவர்களால் ஒவ்வொரு பிரகாரத்தையும் தனித்தனியாக சுற்றிவர முடியாது. இவர்கள் ஒன்றாக சேர்த்து அந்த கோவிலை ஒருமுறை சுற்றி வந்து கொடிமரத்தின் முன்னால் வணங்கி நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். இந்த கொடிக்கம்பத்தின் முன்னாள் நாம் செய்யும் நமஸ்காரமானது அந்தப் பிரகாரத்தில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் நமஸ்காரம் செய்த புண்ணியத்தை நமக்குத் தரும்.

அப்படி நமஸ்காரம் செய்யும் போது ஆண்கள் அஷ்டாங்க பணிவு என்று சொல்லப்படும் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்கள் பஞ்சாங்க பணிவு என்று சொல்லப்படும் முட்டிக்கால் இட்டு தரையில் விழுந்து இறைவனை நமஸ்காரம் செய்ய வேண்டும். இப்படி நமஸ்காரம் செய்து விட்டு ஒரு ஐந்து நிமிடங்களாவது கோவிலில் அமர்ந்து அந்த இறைவனை மனதார தியானித்து வழிபட வேண்டும். இப்படியாக நாம் இறைவனை முறைப்படி வலம் வந்து வணங்கும் போது அந்த இறைவனின் அருளை நம்மால் முழுமையாக பெற முடியும் என்பது உண்மையான ஒன்று.


Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments