மாவூற்று வேலப்பர் கோயில்:
தமிழ்நாடு, தேனி மாவட்டம், ஆண்டிபட்டியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் #தெப்பம்பட்டி சிற்றூரில் அமைந்துள்ளது.
மலையில் 300 படிகளை கடந்து சென்றால் வேலப்பர் கோயிலை அடையலாம்.
இந்த கோயிலின் முதன்மைக் கடவுள் முருகன் ஆவார்.
இக்கோயிலுக்கு அருகே ஒரு மாமரத்தின் அடியில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது. இதனால் இக்கோயில் ”#மாவூற்று வேலப்பர் கோயில்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
கோயில் தகவல்கள்:
அமைவு:தெப்பம்பட்டி, தேனி
மூலவர்:வேலப்பர், முருகன்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்
வரலாறு கட்டப்பட்ட நாள்:1000 ஆண்டுகளுக்கு முன்
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது.
ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples
0 Comments