ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்



108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் (Srirangam temple all information about history, timings, routemap and specialties about ramanujar, temple festivals, address and location)

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவில் வரலாறு மற்றும் சிறப்பினை அறிந்து கொள்ளலாம்.

Srirangam temple god and godess ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெய்வங்கள்

அருள்மிகு ஶ்ரீரங்கம் கோயில் சன்னதிகள்

மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 உப – சன்னதிகளும் உள்ளன.

கோயிலில் உள்ள இதர சன்னதிகள்:

  • தாயார் சன்னதி
  • சக்கரத்தாழ்வார் சன்னதி
  • உடையவர் (இராமனுஜர் சன்னதி)
  • கருடாழ்வார் சன்னதி
  • தன்வந்திரி சன்னதி
  • ஹயக்கிரீவர் சன்னதி

Srirangam temple history ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வரலாறு

புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் என்று சொல்வார்கள். புரட்டாசி மாதத்தில் 30 நாட்களும் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செல்வ செழிப்பு உள்பட அனைத்து பலன்களும் ஒருங்கே கிடைக்கும் என்பது ஐதீகம்

குறிப்பாக சனிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் புதன் வீடாகிய கன்னி ராசியில் சூரிய பகவான் அமர்கிறார். புதன் கிரகமானது பெருமாளை குறிக்கும். இந்த கால கட்டத்தில் உடல் வெப்பநிலை பொதுவாக அதிகரிக்கும். அதை சமப்படுத்தவே நமது முன்னோர்கள் துளசி தீர்த்தத்தை பயன்படுத்தினார்கள்.

அசைவத்தையும் தவிர்த்தார்கள். அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றிணைந்து பயன் தரும். புரட்டாசியில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது நமது மனதையும், உடலையும் மேம்படுத்தும். இதை கருத்தில் கொண்டு உங்களுக்கு மாலைமலர் தினமும் ஒரு திவ்யதேசத்தை அறிமுகம் செய்கிறது.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவான ஸ்ரீரங்கத்தில் அமையப்பெற்றுள்ள ஏழு சுற்று மதில்களுக்குள் 158 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சிறிய தீவு நகரமாக திகழ்கிறது ரெங்கநாதர் கோவில்.

இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது. ஸ்ரீரங்கம் கோவில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதா கும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.

ராமர் இந்த விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷ ணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந் தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்து விட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியாததால் கலங்கினான்.

அங்கு ஆண்டுவந்த தர்ம வர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி” பள்ளி கொண்ட ருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோவில் எழுப்பி வழிபாடு செய்தான்.

தர்மவர்ம சோழன் கட்டிய ஸ்ரீரங்கம் கோவில் காவிரியின் வெள்ளப்பெருக் கினால் மண்ணில் புதை யுண்டு மறைந்தது. பின்னர் கிளிச்சோழன் ஒரு கிளியின் உதவியுடன் மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டு பிடித்தான். “வைகுந்தத்திலுள்ள விஷ் ணுவின் கோவில் இருந்த இடம் இதுதான். அக்கோவிலை இப்போதும் இங்கு காணலாம் என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்ப கனவில் சொல்லிக் கொண்டிருந்தது. அதன்படி விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோவில் எழுப்பினான். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

Srirangam temple architecture and gopuram ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கட்டமைப்பு:

ஶ்ரீரங்கம் திருக்கோயிலானது, இந்தியாவின் தென் முனையை நோக்கியவாறு 10 டிகிரி 52’ வடக்கிலும் மற்றும் 78 டிகிரி 42’ கிழக்கிலும் காவிரிநதியின் இரு கிளைகளால் உருவாக்கப்பட்ட ஒரு தீவில் அமைந்திருக்கிறது. இக்கோயில் ஏறக்குறைய 6,31,000 சதுரமீட்டர் (156 ஏக்கர்) கொண்ட ஒரு பரந்த பகுதியை உள்ளடக்கியிருக்கிறது. இந்தக் கோயிலில் மூலஸ்தானத்தைச் (கருவறை, கர்ப்பகிரகம்) சுற்றி ஏழு அடர்ந்த செவ்வகப் பிரகாரங்கள் உள்ளன. ஏழு பிரகாரங்கள் கொண்ட இந்தியாவில் உள்ள ஒரேவொரு கோயில் ஶ்ரீரங்கக் கோயில் மட்டுமே ஆகும். இன்றைய வைணவர்களுக்கு ஒரு புனித அடையாள எண்ணான ஏழு, யோகாவின் ஏழு மையங்களைக் குறிப்பதாக அல்லது மத்தியில் உயிர் (ஆத்மா) குடியிருக்கக்கூடிய மனித உடலின் ஏழு கூறுகளைக் குறிப்பதாக இருக்கிறது.

Srirangam temple ramanujar story ஸ்ரீரங்கம் ராமானுஜர் சன்னதி மகிமை:

பிற்கால தலைமுறையினர் ராமானுஜர் பற்றி அறிந்துகொள்வதற்காக, அவரது காலத்திலேயே அவரைப்போல இரண்டு விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 1017-ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் பிறந்தார். ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி, மேல்கோட்டை, திருநாராயணபுரம் ஆகிய பல திவ்ய தேசங்களில் வாழ்ந்து ஆன்மிகப் பணிகள், சமய சீர்திருத்தம், வைணவத்தை வளர்க்க ‘விசிஷ்டாத்வைதம்’ என்ற சித்தாந்தம், கோவில் வழிபாட்டு கோட்பாடுகள் மற்றும் அவற்றின் பூஜை முறைகள் ஆகியவற்றை வகுத்து தந்தவர் இவர்.

பிற்கால தலைமுறையினர் ராமானுஜர் பற்றி அறிந்துகொள்வதற்காக, அவரது காலத்திலேயே அவரைப்போல இரண்டு விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றை, ராமானுஜர் தழுவி தன்னிடம் இருந்த ஆத்ம சக்தியை அதில் பிரதிஷ்டை செய்தார். திருநாராயணபுரத்தில் உள்ள அந்த விக்கிரகம் ‘தமர் உகந்த திருமேனி’, அதாவது ‘அடியார்களுக்கு மிகவும் பிடித்த விக்கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று மற்றொரு விக்கிரகம் ஸ்ரீபெரும்புதூரில் தயார் செய்யப்பட்டது. அது ‘தான் உகந்த திருமேனி’, அதாவது ‘ராமானுஜருக்கு பிடித்த விக்கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த சிலை கண் திறப்பின்போது, ராமானுஜரின் சக்தி அதற்குள் செலுத்தப்பட்டதாக ஐதீகம்.

திருநாராயணபுரத்தில் உள்ள தமர் உகந்த திருமேனி ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்து, முடிவில் அவருடைய உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘பள்ளிப்படுத்தல்’ செய்யப்பட்டது. அது, ‘தானான திருமேனி’ என அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன இரண்டையும் விட இதுவே முக்கியமானதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் கிட்டத்தட்ட 800 வருடங்களுக்கும் மேலாக அருள்பாலித்து வரும் ராமானுஜரின் தானான திருமேனி பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ராமானுஜர் பரமபதம் அடைந்த பிறகு, அவரது உடல் ஒரு வாகனத்தில் அமர்த்தப்பட்டு, அவரது சீடர்கள், ஜீயர்கள், பல்லாயிரக் கணக்கான வைணவர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ ராமானுஜர் உடல் தாங்கிய வாகனம் இறுதி ஊர்வலத்தை தொடங்கியது. ஸ்ரீரங்க பெருமாள் அரையர் தலைமையில் அரையர்கள் திருவாய்மொழி ஓதியபடி பின் தொடர்ந்தனர். இறுதி ஊர்வலம் தொடங்கிய நேரத்தில் ரங்கநாதர் கோவிலில் இருந்து அசரீரி ஒன்று ஒலித்ததாக ஐதீகம். ‘ராமானுஜன் எந்தன் மாநிதி’ என்றும், ‘ராமானுஜன் எந்தன் சேம வைப்பு’ என்றும் அந்தக்குரல் ஒலித்தது. எனவே, ராமானுஜரின் உடல் என்ற சேம வைப்பை அரங்கன் திருக்கோவில் வளாகத்தில், துறவிகளுக்கான சம்ஸ்கார விதிகளின்படி பள்ளிப் படுத்த பெருமாளின் கட்டளையாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பொதுவாக, வைணவ சம்பிரதாயப்படி மறைந்த துறவிகளின் உடலுக்கு எரியூட்டும் வழக்கம் இல்லை. மாறாக, அவர்களது உடல் பள்ளிப்படுத்தப்படும். அதாவது, சமாதியில் அமர வைக்கப்பட்ட நிலையில் வைத்து, தக்க முறைகளின்படி சமாதி மூடப்படும். அதுபோல ராமானுஜரின் உடல் ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில், வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் பள்ளிப்படுத்தப்பட்டது. அங்கே தற்போது ராமானுஜர் என்று அழைக்கப்படும் உடையவரின் சன்னிதி உள்ளது. அங்கே, பத்மாசன நிலையில் அமர்ந்து, தியானத்தில் உள்ள திருமேனிபோல இன்றும் உயிரோட்டமாக காட்சி தருகிறது.

ராமானுஜரின் கண்கள் திறந்த நிலையில் இருப்பதோடு, கால் விரல்கள், நகங்கள், கைகளில் ரோமங்கள் இருப்பதையும் காணலாம். அவரது உடல் பச்சை கற்பூரம் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றைச் சேர்த்து தயார் செய்யப்பட்ட கலவையினால் மூடப்பட்டுள்ளது. 1137-ம் ஆண்டு காலமான ராமானுஜரின் உடல் அப்படியே பல்வேறு திரவியங்கள் மற்றும் சூரணங்களால் பதப்படுத்தப்பட்டு, பள்ளிப்படுத்தல் என்ற முறையில் ஸ்ரீரங்கம் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட, 800 ஆண்டுகளுக்கும் மேலாக யோக உஷ்ணத்தின் அடிப்படையில், அந்த உடல் இறுகி, நிலை மாறாமல் இருக்கிறது. அந்த இடத்தின் மீதுதான் தற்போது எம்பெருமானார் என்று சொல்லப்படும் ராமானுஜரின் சன்னிதி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது. இப்போதும் அவரது திருமேனி வைத்தவாறே உள்ளே இருப்பதாகவும், அதற்கு மேற்புறத்தில் இப்போது உள்ள ரூபம்தான் ‘தானான மேனி’ என்பதும் பல ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த திருமேனிக்கு திருமஞ்சனம், அதாவது எந்த விதமான அபிஷேகமும் நடைபெறுவதில்லை. வருடத்துக்கு இருமுறை பச்சைக் கற்பூரம் மற்றும் குங்குமப் பூ ஆகியவற்றால் ஆன ஒருவகை குழம்பு மட்டுமே சாற்றப்படுகிறது.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

 

Post a Comment

0 Comments