சுவாமி ஐயப்பன் பிறப்பு, சபரிமலை கோவில் நீங்கள் அறியாத வரலாறு மற்றும் சன்னதிகளின் பெருமை; எப்படி சபரிமலையை அடையலாம்

 

கேரளாவில் உள்ள சாஸ்தா கோவில்களில் மிகவும் புகழ்பெற்றதும் முக்கியமானதும் ஐயப்ப சுவாமிக்காக கட்டப்பட்ட சபரிமலை ஸ்ரீ தர்மஸ்தலா கோவிலாகும். கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள மலை சிகரத்தில் (கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரம்) சபரிமலை மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும். இந்த கோவிலுக்கு எல்லா மதத்தினரும் வரவேற்கப்படுகிறார்கள். கோவிலில் ஐயப்பன் சன்னிதானத்துக்கு அருகில் கிழக்கில் வாவரா நாடா என்றழைக்கப்படும் ஒரு சன்னிதானம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஐயப்பனின் நெருங்கிய நண்பரான வாவர் என்பவருக்காகக் கட்டப்பட்டது. இது மத நல்லிணக்கத்திற்கு நல்ல உதாரணமாகும். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இது ஆண்டு முழுவதும் திறந்திருப்பதில்லை. இந்த கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு, விஷூ மற்றும் மலையாள மாதத்தின் முதல் நாட்களில் மட்டும் திறந்திருக்கும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களுக்கு முன்பிருந்தே பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்க வேண்டும். பக்தர்கள் பாரம்பரிய கடினமான காட்டுவழிப் பாதையிலும் செல்கின்றனர். அத்துடன் கோவிலை அடைய சற்று சிரமம் குறைவான பம்பை நதி வழிப் பாதையிலும் பயணிக்கின்றனர்.


கேரளாவில் உள்ள சாஸ்தா கோவில்களில் மிகவும் புகழ்பெற்றதும் முக்கியமானதும் ஐயப்ப சுவாமிக்காக கட்டப்பட்ட சபரிமலை ஸ்ரீ தர்மஸ்தலா கோவிலாகும்.


கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள மலை சிகரத்தில் (கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரம்) சபரிமலை மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும். இந்த கோவிலுக்கு எல்லா மதத்தினரும் வரவேற்கப்படுகிறார்கள். கோவிலில் ஐயப்பன் சன்னிதானத்துக்கு அருகில் கிழக்கில் வாவரா நாடா என்றழைக்கப்படும் ஒரு சன்னிதானம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஐயப்பனின் நெருங்கிய நண்பரான வாவர் என்பவருக்காகக் கட்டப்பட்டது. இது மத நல்லிணக்கத்திற்கு நல்ல உதாரணமாகும். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இது ஆண்டு முழுவதும் திறந்திருப்பதில்லை. இந்த கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு, விஷூ மற்றும் மலையாள மாதத்தின் முதல் நாட்களில் மட்டும் திறந்திருக்கும்.
  


சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களுக்கு முன்பிருந்தே பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிக்க வேண்டும். பக்தர்கள் பாரம்பரிய கடினமான காட்டுவழிப் பாதையிலும் செல்கின்றனர். அத்துடன் கோவிலை அடைய சற்று சிரமம் குறைவான பம்பை நதி வழிப் பாதையிலும் பயணிக்கின்றனர்.

சுவாமி ஐயப்பன் - பிறப்பு மற்றும் வரலாறு

சுவாமி ஐயப்பன் - பிறப்பு மற்றும் வரலாறு

மதுரை, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் பரவியிருந்த பாண்டிய சாம்ராஜ்ஜியத்துக்கு முந்தைய ஆட்சியாளரான திருமலை நாயக்கரால் வெளியேற்றப்பட்ட பாண்டிய வம்சாவளியினர் வள்ளியூர், தென்காசி, செங்கோட்டை, அச்சன்கோவில் மற்றும் சிவகிரி போன்ற பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் திருவாங்கூரின் பல பகுதிகளிலும் தங்கள் சமஸ்தானத்தை விரிவுபடுத்தி இருந்தனர். அவர்களில் சிலர் சிவகிரியின் செம்பழநாட்டுக் கோவிலை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எண்ணூறு வருடங்களுக்கு முன் பந்தள நாட்டை ஆளும் உரிமையை திருவாங்கூர் ராஜா வழங்கியிருந்தார். சுவாமி ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை மன்னர் ராஜசேகரன் இந்த அரச வம்சத்தை சேர்ந்தவராவார்.

நீதியும் நேர்மையும் புத்திசாலித்தனமும் இறையாண்மையும் கொண்ட மன்னர் ராஜசேகர் அவருடைய குடிமக்களால் மிகுந்த மரியாதையுடன் போற்றப்பட்டார். அவருடைய ஆட்சிக்காலம் அந்த நாட்டின் பொற்காலமாக இருந்தது. ஆனால் மன்னருக்கோ மிகப்பெரிய மனக்குறை ஒன்று இருந்தது. அவருக்கு குழந்தை இல்லை. அவருடைய ஆட்சிக்காலத்திற்குப் பிறகு மகுடத்தை ஏற்க ஒரு வாரிசு இல்லை. மகிழ்ச்சியற்ற ராஜாவும் அவருடைய பட்டத்து ராணியும் ஒரு குழந்தைக்காக சிவபெருமானிடம் இடைவிடாமல் வேண்டினர்.

அதே நேரத்தில் மகிஷாசுரன் என்கிற அரக்கன் பிரம்மதேவனை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டான். அவனுடைய கடுமையான தவத்தின் விளைவாக மகிஷனை பூமியில் யாராலும் அழிக்க முடியாது என்கிற அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வரம் அளிக்க வேண்டிய கட்டாயம் பிரம்மதேவனுக்கு ஏற்பட்டது. பிரம்மன் கொடுத்த வரத்தால் அசாத்திய தைரியம் அடைந்த மகிஷாசுரன் மனிதர்களையும் ஆங்காங்கே சிதறிக்கிடந்த பழங்குடி சமூகத்தினரையும் படிப்படியாக அழிக்கத் தொடங்கினான். அவனுடைய கொடுமையான செயல்களால் பயந்து போன மக்கள் தூர தேசங்களுக்கு ஓடிவிட்டனர். ஒரு தெய்வீக சக்தியால் மட்டுமே அவனை அழிக்க முடியும் என்பதை உணர்ந்த தேவர்கள் துர்காதேவியை தஞ்சமடைந்தனர். துர்க்கை அம்மன் அவனை ஒரு ரத்தக்களறி போரில் கொன்றார்.



தனது சகோதரனைக் கொன்றவர்களை பழிவாங்க உறுதி பூண்ட மகிஷாசுரனின் சகோதரி மகிஷி பிரம்மனை நோக்கி கடுந்தவம் புரிந்து மகா விஷ்ணுவுக்கும் (ஹரி) மற்றும் சிவபெருமானுக்கும் (ஹரன்) பிறக்கும் குழந்தையால் மட்டுமே தன்னை கொல்ல முடியும் என்கிற ஒரு வரத்தைப் பெற்றுக் கொண்டாள். அதன் பிறகு தேவலோகத்திற்கு சென்ற மகிஷி தேவர்களைத் துன்புறுத்த தொடங்கினாள். இதனால் வேதனையுற்ற தேவர்கள் மகாவிஷ்ணுவை இதில் தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்து வைக்கும்படி வேண்டினர்.

ஹரிஹரனுக்கு பிறக்கும் மகனைத் தவிர வேறு யாராலும் மகிஷியை கொல்ல முடியாது என்கிற வரத்தை அவள் பெற்றிருப்பதால் மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். விஷ்ணுவின் பெண் வடிவமான மோகினிக்கும் சிவபெருமானுக்கும் இணைவு ஏற்பட்டு அதன் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்து அதை சிவபக்தனான குழந்தையில்லாத பந்தளராஜன் ராஜசேகரனின் பராமரிப்பில் விடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஒருநாள் பம்பை நதிக்கரையில் உள்ள காடுகளில் வேட்டையாட பயணம் மேற்கொண்ட மன்னன் ராஜசேகரன் ஆற்றங்கரையின் இயற்கை அழகு கொஞ்சும் சுற்றுப்புறம் மற்றும் நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு ரசித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது காட்டிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டார். திகைத்துப்போன அந்த மன்னன் ஒலி வந்த திசையை நோக்கி பின்தொடர்ந்து சென்ற போது அங்கே ஒரு அழகான குழந்தை கை கால்களை உற்சாகமாக உதைத்தபடி படுத்து கிடந்தது.

குழப்பத்துடன் அங்கே நின்ற மன்னன் குழந்தைக்கு சொந்தமானவர்கள் யாரும் சுற்றிலும் இல்லாததால் இந்த குழந்தையை தனது அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்க்க வேண்டும் என்று மனதில் ஏக்கம் கொண்டார். அந்த தெய்வீகக் குழந்தையை மன்னன் ராஜசேகரன் பார்த்துக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ ஒரு முனிவர் தோன்றி ‘குழந்தையை உனது அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்த்துக்கொள்’ என்று அறிவுறுத்தினார்.

மேலும் அந்தத் துறவி இந்த குழந்தை உனது அரச வம்சத்தின் எல்லாத் துன்பங்களையும் நீக்குவான் என்றும் சிறுவனுக்கு 12 வயதாகும்போது மன்னர் ராஜ சேகரனுக்கு அந்தக் குழந்தையின் தெய்வீகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்றும் உறுதியளித்தார். கையில் கிடைக்கும் போதே குழந்தை கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்ததால் தங்கக் கழுத்து உடையவன் என்கிற பொருள்படுமாறு குழந்தைக்கு 'மணிகண்டன்' என்று பெயர் சூட்டும்படி அந்த சாது அறிவுறுத்தினார்.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments