மதுரை அருள்மிகு அழகர் கோவில் தல வரலாறு மற்றும் சிறப்புகள்..

 மதுரை அருள்மிகு அழகர் கோவில் தல வரலாறு மற்றும் சிறப்புகள்..


அழகர் கோவில் தலச்சிறப்பு :

 சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பான திருவிழாவாக மதுரை மக்களால் கொண்டாடப்படுகிறது. தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும்மதுரை அருள்மிகு அழகர் கோவில் தல வரலாறு மற்றும் சிறப்புகள்..

அழகர் கோவில் தல வரலாறு
“அழகர் மலை” என்பது மதுரைக்கு வடக்கே 21 கி .மீ தூரத்தில் இருக்கிறது. இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது. இதற்குத் திருமாலிருஞ் சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷ பாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு.

இது கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது .அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோயில் இருக்கிறது. இம் மலையில் பலவகை மரங்களும், செடிகளும், கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியைத் தந்து நிற்கின்றன.

இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதைச் சோலைமலை, திருமாலிருஞ் சோலை, வனகிரி, முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள். இச் சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகிப் கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டுகிறது.

இங்கு கோயில் கொண்டு உறைகின்ற இறைவன் “அழகர்” என்று போற்றப்படுகிறார். இவரே வடமொழியில் “சுந்தர ராஜன்” என்று சொல்லப்படுவர். திருமாலுக்கும் அவருடைய அவதாரமாகிய இராமபிரான் முதலானவர்களுக்கும் அழகர் என்னும் பழைய தமிழ் நூல்களிலேயே வழங்கப்பட்டிருக்கிறது.

அழகர் என்பதற்கு அழகுடையவர், அழகானவர் என்று பொருள் மதுரை நகரத்தில் உள்ள பழைய திருமால் திருத் தலத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்திக்கும் கூடலகர் என்னும் பெயர் ஏற்பட்டிருப்பதும் இதனால் தான்.  

இன்னும் பல திருத் தலங்களிலும் எம் பெருமானுக்கு அழகர் என்றும் சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள் உண்டு. 108 திவ்ய தேசங்களில் அன்பில் என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் திருநாகை (நாகப்பட்டினம்) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் மற்றும் கூடல் (மதுரை) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

கள்ளழகர் திருத்தலம் மிகவும் பழமையானது. இது எப்பொழுது தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது. மிகவும் பழைய தமிழ் நூல்களிலும் வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை பேசப்பட்டிருக்கிறது.

இங்கே உள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகியவை பற்றிய வராக புராணம், பிரம்மாண்டமான புராணம், வாமன புராணம், ஆக் நேய புராணம் முதலியவற்றில் மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து “விருஷ பாத்திரி மகாத்மியம்” என்ற ஸ்தல புராணத்தின் தமிழாக்கம் தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் இத் தலத்தின் புராணப் பெருமைகளை அறிந்து கொள்ளலாம்.
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் சிற்பங்கள்
தேர் மண்டபம்.
யானை வாகன மண்டபம்.
பதினாறு தூண் மண்டபம் (ஆண்டாள் மண்டபம்).
கொண்டப்ப நாயகர் மண்டபம்.
திருகல்யாண மண்டபம்.
கோடைதிருநாள் மண்டபம்.
பொன்வைத்த பெருமாள் மண்டபம் (சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது).
ஆர்யன் மண்டபம் (படியேற்ற மண்டபம்).
மஹா மண்டபம் (அழகேந்திர மண்டபம் ).
வசந்த மண்டபம்.
மாதவி மண்டபம்.

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் நுபுரகங்கை :
இந்த நீருற்றில் உள்ள தண்ணீர் ஆனது சொர்க்கத்தில் இருந்து கோவிலின் மலை உச்சிக்கு வருவதாக நம்பப்படிகிறது. இக்குளத்தில் குளிப்பதன் மூலம் மனிதர்களின் ஆசைகள் நிறைவேறுவதாக கூறப்படுகிறது. அதனால் இக்குளத்திற்கு இஷ்ட சித்தி என ஒரு பெயர் உள்ளது, மேலும் சரவனம், பவ தரணி மற்றும் இஷ்ர சித்தி என மூன்று நீரூற்றுகள் இந்த புனித நீரில் கலப்பதாக சிலப்பதிகாரத்தில் ஒரு குறிப்பு உள்ளது.

இந்த நீரில் உயர்தர தாதுக்கள் நிறைந்துள்ளது. இதில் இரும்பு மற்றும் செம்பு போன்ற கனிமங்கள் உள்ளன. இந்த நீரானது பல நோய்களை குணப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. இந்த நீரானது இனிப்பு சுவை கொண்டது. இங்கே இறைவன் ஹனுமனுக்கு தந்த (ராம பக்தர்) ஹனுமான் தீர்த்தம் உள்ளது. இதன் பெயர் “கருட தீர்த்தம்” என்றழைக்கப்படுகிறது. கோவிலின் வடக்கு புறத்தில் உள்ள உத்தர நாராயனவினி நீர் மற்ற சிலைகள் நீராடுவதற்கு பயன்படுகிறது.

அழகர் கோவில் (Alagar kovil) திறக்கப்படும் நேரம் 
காலை 6.00 மணி முதல் 12.30
மாலை 3.30 முதல் இரவு 8.00

அழகர் கோவில் (Alagar kovil) திருவிழாக்கள் :
சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் (பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவர்) சித்திரை திருவிழா,ஆடி பிரம்மோற்சவத் திருவிழா.

அழகர் கோவில் முகவரி : அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில் – 625 301, மதுரை மாவட்டம்.

அழகர் கோவில் தொலைபேசி எண் : 0452-2470228

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments