1000 மடங்கு புண்ணியம் தரும் பானு சப்தமி
பானு என்றால் சூரியன் என்று அர்த்தம். சூரியனுக்கு உகந்த நாள் ஞாயிற்றுக் கிழமை. சப்தமி திதியும், ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றாக வரும் நாள் ‘பானு சப்தமி’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது. இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது சூரிய கிரகணம் முடிந்த பிறகு செய்யும் தர்ப்பணத்துக்கு ஒப்பானது. இந்த தினத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நதி தீரத்தில் நீராடி சூரிய வழிபாடு செய்தல், தானம் செய்தல் ஆகியவை பல்வேறு நலன்களைக் கொண்டுவரும். மற்ற தினங்களில் செய்யும் தான தர்மங்களை விடவும் இந்த தினத்தில் செய்யும் தானத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும்.
சூரிய வழிபாடு இந்த தினத்தில் சூரிய வழிபாடு செய்தால் பல்வேறு தோஷங்களும் கழியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்று விரதமிருந்து சூரியனை வழிபட்டால் நீண்ட நாள்களாக நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுபவர்களுக்கு நல்லது நடக்கும். இந்த தினத்தில் காலையில் எழுந்து நதியில் நீராடி நித்திய பூஜை மற்றும் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல வந்துசேரும்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments