கடையநல்லூர் ஆஞ்சனேயர் கோவில்
சாலை வழியில் மதுரை- செங்கோட்டை சாலையில் சுமார் அறுபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடையநல்லூருக்கு முந்தைய பேருந்து நிறுத்தம் கிருஷ்ணாபுரத்தில் இறங்க வேண்டும்.
கடையநல்லூர் ரயில் நிலையத்திலிருந்தும், கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்தும் ‘ஷேர் ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
கடையநல்லூர் ஆஞ்சனேயர் கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரயில் பாதையில் (மதுரை – செங்கோட்டை மார்க்கம் சுமார் அறுபத்திரெண்டு கிலோமீட்டர் தொலைவில் கடையநல்லூர் அமைந்துள்ளது.
சாலை வழியில் மதுரை- செங்கோட்டை சாலையில் சுமார் அறுபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடையநல்லூருக்கு முந்தைய பேருந்து நிறுத்தம் கிருஷ்ணாபுரத்தில் இறங்க வேண்டும்.
கடையநல்லூர் ரயில் நிலையத்திலிருந்தும், கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்தும் ‘ஷேர் ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
கடையநல்லூர் ஆஞ்சனேயர் கோவில் – ‘அருள்மிகு கோபாலகிருஷ்ண சுவாமி வகையறா திருக்கோவில்கள்' என்ற தனியார்களுக்கு பாத்தியப் பட்ட கோவில். தற்போது அரசாங்கத்தின் ‘இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்லலாம். இது கடையநல்லூர் ரயில் நிலையம். இங்கு கோவிலைப் பற்றிய அறிவிப்பும் இருக்கிறது. மதுரை செங்கோட்டை பாசஞ்சர் ரயில் மிகவும் வசதியாக இருக்கிறது. மதுரையில் காலை ஏழு மணிக்கு கிளம்புகிறது. இங்கு சுமார் பத்து மணிக்கு வந்து சேருகிறது. அனேகமாக ரயில் முழுவதும் இங்கு காலியாகி விடுகிறது என்று சொல்லலாம்.
திரும்புவதற்கு மதியம் ஒரு மணிக்கு ரயில் இருக்கிறது. மாலை சுமார் ஐந்து மணிக்கு இருக்கும்.
ரயில் நிலையத்திலிருந்து ‘ஷேர் ஆட்டோக்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து வரை ஓடுகின்றன. மிகவும் நியாயமான கட்டணத்தில் ஓடுகின்றன. பக்தர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட நண்பர்களாக இருக்கிறார்கள். நாம் செல்லும் பாதை இருமருங்கும் வயல்கள் இருக்கின்றன. நல்ல உயர்ந்த மரங்கள் வழி நெடுக இருக்கின்றன.நல்ல காற்று. கிட்டத்தட்ட ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கோவில் இருக்கிறது. நிறைய பக்தர்கள் நடந்து வருகிறார்கள்.நடப்பது அப்படி ஒன்றும் கடினமாக இல்லை. சாலை வசதி நன்றாக இருக்கிறது.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples
0 Comments