விஜயவாடா துர்கா தேவி கோயில்

 விஜயவாடா துர்கா தேவி கோயில்

இந்திரகீலாத்ரி மலைகளின் உச்சியில் இந்த கனக துர்கா கோயில் அமைந்துள்ளது. இந்த மலையை ஒட்டியே கிருஷ்ணா ஆறும் ஓடுகிறது. விஜயவாடா நகர காவல் தெய்வமான கனக துர்க்கா எனப்படும் துர்க்கையம்மன் இந்த கோயிலில் வீற்றுள்ளார். புராணக்கதைகளின்படி, இந்த ஸ்தலத்தில் சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்ற அர்ஜுனன் துர்கா தேவிக்காக இக்கோயிலையும் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. தற்போது நாம் காணும் கோயில் வளாகம் 12ம் நூற்றாண்டில் விஜயவாடா ராஜ்ஜியத்தை ஆண்ட பூசாபதி மாதவ வர்மா எனும் மன்னரால் நிர்மாணிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. வேத நூல்களின்படி இந்த கோயிலின் ஆதிவடிவம் ‘சுயம்பு’வாக உருவானதாகவும், ஆகவே இது மிகச்சக்தி வாய்ந்ததென்றும் சொல்லப்படுகிறது. சரஸ்வதி பூனை மற்றும் தெப்போத்சவம் போன்ற திருவிழாக்கள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே அமைந்திருப்பதால் இந்த கோயிலுக்கு விஜயம் செய்வது சுலபமாகவும் உள்ளது.

Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments