வேண்டுதல்களை நிறைவேற்றும் புட்லூர் அம்மன்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் ராமபுரம். ஊருக்கு
நடுவே கோயில் கொண்டிருக்கிறால் பூங்காவனத்தம்மன். சென்னை சென்ட்ரலில் இருந்து சுமார்
38 கி.மீ., கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 35 கி.மீ., தொலைவில் உள்ளது.
நிறைமாதக் கரு சுமந்த வயிற்றுடன், வாய் திறந்து மல்லாந்த நிலையில் படுத்திருக்கும்
அந்த அம்மனை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால், குழந்தைக்காக
மட்டுமின்றி, வேண்டுதல்களுக்கும் பூங்காவனத்தம்மனைத் தேடி வருகிறார்கள். புட்லூர் ஸ்ரீ
அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலத்திற்கு செல்பவர்கள் பெரும்பாலும் திருமணம் மற்றும் குழந்தை
பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிராகாரத்தை
11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய
பிரார்த்தனை நிறைவேறும்.

0 Comments