திருப்பதி ஏழுமலையானுக்கும் சிவனுக்கும் உள்ள சுவாரஸ்யமான தொடர்பு என்ன தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் என்றால் கைகூப்பி தலை தூக்கி வணங்கத் தோன்றும். அதிலும் இன்று புரட்டாசி மாத அமாவாசை. புராட்டாசி மாதம் வெங்கடவனுக்கு உகந்தது. நாளை முதல் ஒன்பது நாட்களும் நவராத்திரி உற்சவங்கள் திருப்பதியில் கோலாகலமாக கொண்டாடப்படும்.புதுடெல்லி: திருப்பதி ஏழுமலையான் என்றால் கைகூப்பி தலை தூக்கி வணங்கத் தோன்றும். அதிலும் இன்று புரட்டாசி மாத அமாவாசை. புராட்டாசி மாதம் வெங்கடவனுக்கு உகந்தது. நாளை முதல் ஒன்பது நாட்களும் நவராத்திரி உற்சவங்கள் திருப்பதியில் கோலாகலமாக கொண்டாடப்படும்.
இன்று அமாவசை நாள் என்பதோடு, வெள்ளிக்கிழமையாகவும் இருப்பதால், இன்று அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு விசேஷ சாத்து முறை ஒன்று நடைபெற்றது. இந்த சாத்துமுறையின் போது, அலங்காரப் பிரியனான கோவிந்தனுக்கு எந்தவித அலங்காரமும் செய்யப்படுவதில்லை.
ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம் என்பது தெரியுமா?
வழக்கமாக சிவனுக்கு உகந்ததாக கருதப்படும் வில்வ இலை கொண்டு, ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்யப்படுகிறது என்பதும் மார்கழி மாத அர்சனையிலும் வில்வம் உபயோகப்படும் என்பதும் பலருக்கும் தெரியாத தகவல்.
அதேபோல், சிவராத்திரி அன்று நடைபெறும் ‘க்ஷேத்ர பாலிகா’ என்ற உற்சவத்தன்று உற்சவ மூர்த்தி தனது நெற்றில் வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டையை சாற்றிக் கொண்டு திருவீதி உலா வருவார்.
Download Our Mobile App : Tamilnadu Temples
Visit Our website : Tamilnadu Temples

0 Comments