வினாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

 வினாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

திருவள்ளூர்: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர் மற்றும் சுற்றுபுறத்தில் உள்ள வினாயகர் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திருவள்ளூர், பூங்கா நகர், சந்தான வினாயகர் கோவிலில், சந்தன அபிஷேகம் நடந்தது. ஜெயா நகர் விஸ்தரிப்பில் உள்ள மகா வல்லப கணபதி கோவிலில், கணபதி ஹோமமும், இரவு மகா தீபாராதனை, பிரார்த்தனை தேங்காய் கட்டும் நிகழ்ச்சி நடந்தது.திருவள்ளூர் ரயில் நிலைய வினாயகர் கோவில், ஆயில் மில் வெற்றி வினாயகர் கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ வினாயகர் சன்னதி, தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள வினாயகர் சன்னதியிலும் சங்கடஹர சதுர்ததி பூஜை அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பாக நடைபெற்றது.சோழவரம் அடுத்த, நத்தம், ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில் கணபதி சன்னதியில் சிறப்பு யாகம், சங்கட நிவாரண யாகம், நேற்று, காலை, 10:00 மணிக்கு துவங்கி, மதியம், மகா தீபாராதனை நடைபெற்றது.



Download Our Mobile App : Tamilnadu Temples

Visit Our website : Tamilnadu Temples

Post a Comment

0 Comments